twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட்? கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்!

    By
    |

    சென்னை: கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு தமிழ், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துளளனர்.

    Recommended Video

    Oscar Awards | India சார்பில் போட்டியிட Jallikattu தேர்வு | Filmibeat Tamil

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா . கால்பந்து ஜாம்பவனான அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்.

    1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சர்வதேச கால்பந்து உலகில் மிரட்டியவர்.

    பீலேவுக்கு சமமாக

    பீலேவுக்கு சமமாக

    1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா, பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு சமமாகப் பார்க்கப்படுபவர். அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். 10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு பல்வேறு அணிகளின் பயிற்சியாளர் ஆனார்.

    மூளையில் பாதிப்பு

    மூளையில் பாதிப்பு

    இடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காகச் சிகிச்சை பெற்ற மரடோனா, கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனோஸ் ஏரிஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    திடீரென மாரடைப்பு

    திடீரென மாரடைப்பு

    பின்னர் வீட்டுக்குத் திரும்பிய அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவை அடுத்து, 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அர்ஜெண்டினா அரசு அறிவித்துள்ளது.

    மோசமான நாள்

    ஏராளமான ரசிகர்கள் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்படத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், RIP மரடோனா. கால்பந்து உலகுக்கு இது மோசமான நாள். என்ன ஒரு லெஜண்ட்? என்று கூறியுள்ளார்.

    கால்பந்தின் சின்னம்

    10-ம் நம்பர் சீருடையுடன் ஆடிய மரடோனா, இந்தியாவிலும் கால்பந்து மீதான மோகத்தை அதிகப்படுத்தியவர். அவர் ஒரு லெஜண்ட். கால்பந்தின் சின்னம். மரியாதை செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார், இயக்குனர் அறிவழகன்.

    சினிமா பிரபலங்கள்

    இவர்களைப் போல, நடிகர் மோகன்லால், ஆர்யா, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரேயா ரெட்டி, மகேஷ்பாபு, சேகர் கபூர் உள்பட பலர் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் இல்லாமல், ஏராளமான நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Argentina football legend Diego Maradona, 60 passed away due to a cardiac arrest. Tamil film celebrities paid tribute to the footballer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X