twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த விஷயம் பற்றி... 93-ல் சொன்னதைதான் இப்பவும் சொல்லி இருக்கார் நடிகர் ரஜினிகாந்த்!

    By
    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சை சினிமாத்துறையினர் அதிகமானோர் வரவேற்றுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், தமிழகத்தை முதல்வராக ஆள வேண்டும் என்பது அவரது ஒவ்வொரு ரசிகருக்கும் உள்ள ஆசை, எதிர்பார்ப்பு.. கனவ

    தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினி, கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார்.

    வருவாரா மாட்டாரா

    வருவாரா மாட்டாரா

    ஆனால் அதற்குப் பின், மவுனம் காத்து வந்தார் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று வழக்கம் போல சேனல்களில் விவாதங்கள் நடந்துவந்தன. அவர் பதில் ஏதும் சொல்லாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் இப்போ கட்சி ஆரம்பிப்பார், அப்போ ஆரம்பிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

    மாவட்டச் செயலாளர்கள்

    மாவட்டச் செயலாளர்கள்

    சன் டிவி தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் இப்போது நடித்து வருகிறார் ரஜினி. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உட்பட பலர் நடிக்கின்றனர். இதற்கிடையே, திடீரென்று மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். இதனால் அடுத்த ஆண்டு தமிழகம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது.

    மூன்று திட்டங்கள்

    மூன்று திட்டங்கள்

    இதையடுத்து அவர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் செய்தி மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் ரஜினி. இதில் அவர் வெளிப்படையாகவே பேசினார். தனது மூன்று திட்டங்கள் பற்றியும் தனது உடல் நிலையை பற்றியும் சொன்னார். 'முதலமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது.

    கிருஷ்ணா காட்டேஜ்

    கிருஷ்ணா காட்டேஜ்

    சட்டசபையில் உட்கார்ந்து பேசுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அது என் ரத்தத்தில் வரவே இல்லை' என்று கூறி இருந்தார் ரஜினிகாந்த். அவரது இந்தப் பேச்சை சினிமாகாரர்கள் பலர் வரவேற்றுள்ளனர். இயக்குனர் ஒருவர் கூறும்போது, 'அது 1993 ஆம் ஆண்டு. உட்லேண்ட்ஸ் ஓட்டலின், கிருஷ்ணா காட்டேஜில் அந்த பிரபல இயக்குனரைச் சந்தித்தார் ரஜினி. இயக்குனர் ரஜினியிடம் கேட்டார், 'ஏன் அரசியலுக்கு வரத் தயங்கறீங்க?' என்று.

    ஷூட்டிங் முடிஞ்சா

    ஷூட்டிங் முடிஞ்சா

    அப்போது ரஜினி சொன்ன பதில், சட்டசபையில உட்கார்ந்து என்னால கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. அதை நினைச்சுகூட பார்க்க முடியல. ஷூட்டிங் முடிஞ்சா, நான் என் சொந்த வேலையை பார்க்கணும்' என்று. அன்று சொன்னதைதான் ரஜினி இப்போதும் சொல்லி இருக்கிறார். அதனால் ரஜினி இப்போதும் உண்மையாகவே இருக்கிறார் என்கிறார்.

    உடல் நிலைப்பற்றி

    உடல் நிலைப்பற்றி

    பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு இயக்குனர் கூறும்போது, 'எந்த அரசியல் தலைவரும் தனது உடல் நிலைப்பற்றி வெளிப்படையாகச் சொன்னதில்லை. ஆனால், ரஜினி வெளிப்படையாக தனது உடல் நிலையை பற்றிச் சொல்லி இருக்கிறார். அவர் பேச்சில் வந்த அத்தனையும் உண்மை. அவரை நம்பலாம். ஆனால், கட்சிக்கு ஒருவர் ஆட்சிக்கு ஒருவர் என்பது ஏற்க முடியாதது என்கிறார் அந்த இயக்குனர்.

    English summary
    Tamil film industry accepts rajini's speech about his political view
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X