»   »  தயாரிப்பாளர்கள் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவி சாய்க்க வேண்டும்: சரத்குமார்

தயாரிப்பாளர்கள் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவி சாய்க்க வேண்டும்: சரத்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லோருக்கும் வேலை கொடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். எனவே தயாரிப்பாளர் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவிசாய்க்க வேண்டும் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கட்டண உயர்வைக் கண்டித்து திரையுலகினர் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அதில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசியதாவது:-

கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்...

கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்...

தமிழ் திரையுலகம் நிறைய பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருக்கிறது. அந்த பிரச்சினைகளில் கியூப், யூ.எப்.ஓ. டிஜிட்டல் நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புக்காகவே இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

விளம்பரக் கட்டணம்...

விளம்பரக் கட்டணம்...

முன்பெல்லாம் படங்களுக்கு ரூ.75 ஆயிரம் பிரிண்ட் செலவு ஆனது. டிஜிட்டல் நிறுவனங்கள் ஒவ்வொரு தியேட்டரிலும் புரஜெக்டரை நிறுவி ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிட்டு நிறுவனமே அந்த தொகைக்கு கடனை ஏற்பாடு செய்து கொடுத்தனர். தியேட்டர்களில் திரையிடும் விளம்பர கட்டணத்தில் இருந்தும் பெருந்தொகை எடுத்துக் கொண்டனர்.

பேச்சுவார்த்தை...

பேச்சுவார்த்தை...

2005-ல் இந்த புரஜெக்டரை நிறுவினார்கள். 10 வருடங்கள் ஆகியும் ரூ.5 லட்சம் கடன் தீர்க்கப்படவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இரு டிஜிட்டல் நிறுவனங்களும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. இனிமேல் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்.

உரிய சலுகை...

உரிய சலுகை...

விளம்பர வருமானம் மூலம் ரூ.4 கோடி வரை அந்த நிறுவனங்கள் ஈட்டி உள்ளன என்று கூறப்பட்டது. ஆர்.கே. செல்வமணி ரூ,.560 கோடி என்றார். அதில் தயாரிப்பாளர்களும் உரிய சலுகை கேட்கிறார்கள்.

முதலாளிகள்...

முதலாளிகள்...

அவர்கள்தான் முதலாளிகள். எனவே தயாரிப்பாளர்களுக்கு உரிய மரியாதை வேண்டும் எல்லோருக்கும் வேலை கொடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். எனவே தயாரிப்பாளர் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவிசாய்க்க வேண்டும்' என்றார்.

பார்க்கிங் கட்டணம்...

பார்க்கிங் கட்டணம்...

டி. ராஜேந்தர் பேசும் போது, ‘‘தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். பெரிய படங்களுக்கும் புது படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணங்களை நிறுத்த வேண்டும்'' என்றார்.

ஒற்றுமையே பலம்...

ஒற்றுமையே பலம்...

நடிகர் விவேக் பேசுகையில், ‘டிஜிட்டல் நிறுவனங்களால் தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள். திரையுலகினர் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். சரத்குமார் சொன்னால் நடிகர்கள் கேட்க வேண்டும். கலைப்புலி தாணு சொன்னால் தயாரிப்பாளர்கள் கேட்க வேண்டும்.

இணைய தளங்களில்...

இணைய தளங்களில்...

உங்களுக்கு சோற்றுக்கு வழி ஏற்படுத்துவதற்கு அவர்கள் போராடுகிறார்கள். புதுப்படம் எடுத்தால் அதை வெளிநாடுகளில் திருடி இணைய தளங்களில் வெளியிடுகிறார்கள். நாமும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களை வைத்து அதை தடுக்க வேண்டும்.

அதிக கட்டணம்...

அதிக கட்டணம்...

முன்பெல்லாம் புரஜெக்டர் மூலம் ஒவ்வொரு தியேட்டர்களிலும் பிலிம்சுருள் பெட்டிகளை அனுப்பி படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அது கியூப், யு.எப்.ஓ. டெக்னாலஜிலாக மாறியுள்ளது. இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்' என்றார்.

விநியோகஸ்தர்கள்...

விநியோகஸ்தர்கள்...

இது தொடர்பாக தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் பேசுகையில், ‘தமிழ் திரையுலகம் 10 வருடமாக தேய்ந்து கொண்டு இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்படுகின்றன. விநியோகஸ்தர்கள் இனம் மறைந்து விட்டது. தியேட்டர்காரர்ள் திரையரங்குகளை குத்தகைக்கு விடுகிறார்கள்.

அழியும் தொழில்...

அழியும் தொழில்...

40 வருடமாக படங்கள் எடுத்த நான் இப்போது தயாரிப்பை நிறுத்திவிட்டேன். போட்ட பணத்தை திரும்பி எடுக்க முடியவில்லை. நடுத்தர மக்கள் கூட வீட்டிலேயே படங்களை பார்க்கிறார்கள். எனவே அழியும் இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும்' எனப் பேசினார்.

தயாரிப்பு செலவு குறையும்...

தயாரிப்பு செலவு குறையும்...

உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் ஆர்யா பேசும் போது, ‘‘டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர். என் நண்பன் படத்தோடு எனது படத்தின் டிரையலைரை சேர்த்து திரையிடவும் பணம் கேட்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இந்த நிலைமை அகன்றால் தயாரிப்பு செலவு குறையும்'' என்றார்.

தீர்வு தேவை...

தீர்வு தேவை...

நடிகர் ஜீவா பேசும் போது, ‘‘தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஒரு படத்தை எடுக்கும் போதே நிறைய கஷ்டங்களை சந்திக்கின்றனர். திரையிடும் போது டிஜிட்டல் நிறுவனங்களால் தொல்லைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்'' எனக் கூறினார்.

ஒத்துழைப்பு...

ஒத்துழைப்பு...

டைரக்டர் விக்ரமன் பேசும் போது, ‘‘தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும்'' என உறுதி அளித்தார்.

English summary
The Tamilnadu film producers association along with actors union was contested an one day hunger strike at Chennai for condemning the price hike of cinema digitalization.
Please Wait while comments are loading...