ரஜினி முதல் ஆர்யா வரை...ராணுவ அதிகாரி ரோலில் கம்பீரம் காட்டிய ஹீரோக்கள்

சென்னை : இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76வது ஆண்டு துவங்குகிறது. இதை நாடே கொண்டாடி கொண்டிருக்கிறது.மக்களிடம் தேசப்பற்றினை வளர்த்ததில் சினிமாவின் பங்கும் முக்கியமானது.

திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி, தங்களின் தேசப்பற்றினை வெளிப்படுத்தி வருகின்றனர்.தற்போதும் பல மொழிகளிலும் தேசப்பற்றை வலியுறுத்தும் வகையிலான பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்தினை அனைவருக்கும் சோஷியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் சினிமாவில் தேசப்பற்றுள்ள ராணுவ அதிகாரி ரோலில் நடித்த ஹீரோக்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ராணுவ வீரன் படத்தில் ரஜினி ராணுவ அதிகாரி ரோலில் நடித்திருப்பார். ராணுவத்தில் சேவையாற்றி விட்டு, கிராமத்திற்கு வரும் இளைஞராக நடித்திருக்கும் ரஜினி, பிறகு கிராம மக்களுக்காக போராடுவதாக படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

விஸ்வரூபம் படத்தில் ராணுவத்தின் ரா உளவுப்பிரிவு ஏஜன்டாக கமல் நடித்திருப்பார். அதில் ரகசியமாக ரா விற்காக பணியாற்றி, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் ரோலில் நடித்திருப்பார்.

விஜய்

விஜய்

துப்பாக்கி படத்தில் விஜய் ராணுவ அதிகாரி ரோலில் நடித்திருப்பார். இதே போல் பீஸ்ட் படத்திலும் விஜய் ரா ஏஜன்டாக நடித்திருப்பார். துப்பாக்கி படத்தில் பயங்கரவாத கும்பலை அழிப்பவராகவும், பீஸ்ட் படத்தில் மால் ஒன்றில் பொது மக்களை பிணைகைதிளகாக பிடித்து வைத்திருக்கும் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை காப்பாற்றி, பிறகு இந்தியாவால் தேடப்படும் தீவிரவாத தலைவனை அவர்கள் இடத்திற்கே சென்று பிடித்து வருபவராகவும் நடித்திருப்பார்.

 அஜித்குமார்

அஜித்குமார்

அஜித், ஆரம்பம் படத்தில் ராணுவ ஏஜன்டாக நடித்திருப்பார். ராணுவத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டு பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பவர்களை எதிர்த்து போராடும் ரோலில் அஜித் நடித்திருப்பார்.

சூர்யா

சூர்யா

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். வாழ்க்கையில் பல வித போராட்டங்கள், தோல்விகளை சந்திக்கும் ஒரு இளைஞர் எவ்வாறு தன்னை மாற்றிக் கொண்டு ராணுவத்தில் இணைந்து சேவையாற்றுகிறார் என்பதை காட்டும் படம்.

தனுஷ்

தனுஷ்

முதல் படமான துள்ளுவதோ இளமை படத்திலேயே ராணுவ அதிகாரி ரோலில் நடித்திருந்தார் தனுஷ். முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் நடந்த பிளாஷ் பேக் நிகழ்வுகள் தான் படத்தின் கதை.

சரத்குமார்

சரத்குமார்

ஏய் படத்தில் சரத்குமார் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தாலும் சமூகத்தில் நிலவும் சில தீய சக்திகளால் எந்த மாதிரியான பிரச்சனைகளை அவர் சந்திக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

வாகா படத்தில் விக்ரம் பிரபு ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பற்றிய கதை.தேசப்பற்றுள்ள ராணுவ வீரராக விக்ரம் பிரபு கெத்தாக நடித்திருந்தார்.

விஷால்

விஷால்

ஆக்ஷன் படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். ராணுவ அதிகாரி, சர்வதேச பயங்கரவாதிகளை வேட்டையாடும் கதை. இந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும் விஷாலின் கம்பீரமான தோற்றம், ஆக்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களை கவர்ந்தது.

ஆர்யா

ஆர்யா

கேப்டன் படத்தில் ஆர்யா ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் ராணுவ உயரதிகாரி ரோலில் தான் ஆர்யா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X