»   »  மீடியா வெளிச்சமே இல்லாமல் நடந்த முதல் சினிமா போராட்டம்!#Jallikattu

மீடியா வெளிச்சமே இல்லாமல் நடந்த முதல் சினிமா போராட்டம்!#Jallikattu

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க தலைவர் நாசரின் கோரிக்கையை ஏற்று தமிழ் மீடியாக்கள் நடிகர் சங்க போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

ஜல்லிக்கட்டுக்காக தமிழ் இளைஞர்கள் புரட்சி நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை தமிழ் மீடியாக்கள் கவர் செய்யவில்லை. மீடியா வெளிச்சமே இல்லாமல் நடந்த முதல் சினிமா போராட்டம் இது.

வேண்டாம்

வேண்டாம்

இளைஞர்கள் தமிழ் உணர்வோடு போராடும்போது அதை விட்டுவிட்டு நடிகர், நடிகைகள் வருகிறார்கள் என்று அவர்கள் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டாம் என்று தமிழ் உணர்வாளர்கள், புரட்சியாளர்கள் மீடியாக்களை கேட்டுக் கொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசரும் தங்களின் போராட்டத்தை கவர் செய்ய வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொண்டார்.

மீடியாக்கள்

மீடியாக்கள்

ரஜினியாக இருந்தால் என்ன, அஜீத்தாக இருந்தால் என்ன தமிழகத்தில் நடக்கும் இந்த புரட்சி தான் முக்கியம் என்பதை உணர்ந்த தமிழ் மீடியாக்கள் புரட்சி இளைஞர்கள் பற்றிய செய்திகளை வெளியிட முக்கியத்துவம் அளித்துள்ளன.

புதுசு

திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள போராட்டத்தை விட்டுவிட்டு இளைஞர்களின் புரட்சிக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

English summary
Tamil media has left Nadigar Sangam protest alone by giving importance to the protests by youngsters for their cultural sport Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil