twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சில படங்கள் 'கசக்கும்', பல படங்கள் 'இனிக்கும்'!

    By Shankar
    |

    இனிப்பு என்பதால் அதை மக்கள் அதிகம் நேசிக்கின்றனர். ஆனால் கசக்கும் சில படங்களில் உள்ள ஆழமான இனிப்பைச் சுவைக்க மறந்து விடுகின்றனர்.

    பெதுவாக பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிப்பவர்கள் இந்த இனிப்பை மட்டுமே எதிர்பார்கின்றார்கள்.

    அந்தப் பெரிய 'நடிகர்களின்' ரசிகர்கள் எதையும் எதிர்பார்பதில்லை. இனிப்பாக இருந்தாலும் சரி, கசப்பாக இருந்தாலும் சரி, அதை உட்கொள்ள ஒரு தற்கொலை படையாகவே மாறி விடுகின்றனர். ஆனால் நாம் பேசப்போவது 'கட்டவுட்டுக்கு' பாலபிசேகம் செய்யும் ரசிகர்களை அல்ல... பொதுவான சினிமா ரசிகர்களை. இவ்வாறு இனிக்கும் படங்கள் அதிகபட்சம் சண்டை, நகைச்சுவை, பாசம் போன்ற வலைப்பின்னல் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். மேலும் தற்போது மாஸ் என்ற சொல் இந்தியத் திரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

    Tamil Movies with sweet and bitterness

    மாஸ் ஹீரோ, மாஸ் திரைப்படங்கள் என்பது வெறும் போலித்தனமான ஒன்று. இதில் தமிழ்சினிமா சில காலம் சற்று தொட்டும் தொடாமலும் இருந்து வந்தது. ஆனால் இப்போதுள்ள நிலவரப்படி நாமும் தெலுங்கு பட பானிக்கு சற்று மாறிவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. என்னதான் தேசிய விருது வாங்கினாலும் அந்தப் படங்கள் ஈட்டிய வருவாய் குறைவாகத்தான் இருக்கும். மேலும் சாதாரண மாநில விருது வாங்காவிட்டாலும் அந்த படங்களின் \"ஓப்பனிங்\" வருவாய் வின்னைத்தான்டி வந்ததுபோல் இருக்கும்.இதிலிருந்து என்ன தெரிகிறது.கமர்ஷியல் என்ற தாரக மந்திரம் என்றுமே வேலை செய்கிறது.ஆனால் இந்த கமர்ஷியல் படங்கள் அதிகபட்சம் இரண்டு வருடங்களுக்கு மேல் பேசப்படுவதில்லை.ஆரம்பத்தில் எந்த அளவிற்கு உயரத்தில் இருக்கிறதோ அதைவிட அகளபாதாளத்தில் அடுத்துவரும் சந்ததியினால் தூக்கி விசப்பட்டுவிடும்.அப்படி எடுத்துக்காட்டுவதென்றுப்பார்த்தால் தமிழ் சினிமாவில் தூக்கி எறியப்பட்ட பல படங்களை சுட்டிக்காட்டலாம்.

    அதேபோல் ஆரம்பத்தில் யாராலும் ஏற்கப்படாமல் ஒதுக்கப்பட்ட பல தமிழ் திரைப்படங்கள் அடுத்த சந்ததியினரை அதிகப்படியாக கவர்ந்திழுத்தது என்று கூறினால் அது மிகையாகாது நடிகர்திலம் சிவாஜி கணேசன் படங்கள் ஒவ்வொன்றும் அதற்குச் சான்று. 1968 ல் வொளிவந்த அரிச்சந்திரன் கருப்பு வெள்ளை திரைப்படமானது. அந்த காலகட்டத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. படுதோல்வி அடையாவிடினும் பொருளாதார ரீதியில் வெற்றிபெறவில்லை என்பேதே உண்மை. இருப்பினும் அடுத்த வந்த காலகட்டத்தில் அத்திரைப்படம் கலைத்தாயால் மீண்டும் பிரசவிக்கப்பட்டது. இவ்வாறு சிவாஜியின் அதிகபட்சப் படங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

    Tamil Movies with sweet and bitterness

    அதற்கடுத்தபடியாக 'எம்.ஆர்.ராதா' நடித்து 1954 ல் வெளிவந்த 'இரத்தக்கண்ணீர்' வந்தகாலத்தில் பலரால் ஏசப்பட்ட படம். இன்று அத்திரைப்படத்தையும் அதில் உள்ள கருத்துக்களையும் பாராட்டாதவர்களே கிடையாது. இன்று உள்ள இளைஞர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக கமல் ஹாஸனின் திரைப்படங்கள் பெரும்பாலும் இந்த அம்சத்தினையே பெற்றிருக்கும். சமூகத்தில் நடக்கக்கூடிய பலரும் பார்த்திடாத செய்திகள் அதில் அமைந்திருக்கும். அவ்வாறு அமைந்த மகாநதி திரைப்படம் மிக முக்கியமானது1993 ல் வெளிவந்த இந்த திரைப்படமானது அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடையவில்லை. ஆனால் சிலகாலம் செல்லச் செல்ல பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதுபோல் பல திரைப்படங்களை கமல் தந்திருக்கிறார். தற்போது வரும் புதிய திரைப்படங்கள், அதாவது இதுபோல வருவாய் ஈட்டுவதற்கு மட்டுமே இல்லாமல் புதிய பரிணமங்களைக்கொண்ட படங்களும் அதிகம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

    Tamil Movies with sweet and bitterness

    தங்கமீன்கள், கோலிசோடா, விசாரணை, ஆதலால் காதல் செய்வீர், பரதேசி, யுத்தம் செய், ஈ, அழகர்சாமியின் குதிரை, நான் கடவுள் போன்ற படங்கள் சமூகத்தின் ஆபத்தான இருட்டான பகுதிகளையும், சமூக சீர்கேடுகளையும், எதார்த்தமான பாணியில் கண்முன்னே காட்டியுள்ளன. அனைத்துத்தரப்பு மக்களிடமும் சென்றுசேரவேண்டிய படங்கள் இவைதான்.

    மசாலா திரைப்படங்களைக் கொடுத்த தெலுங்கு சினிமா கூட தற்போது பாகுபலி என்று பிரம்மாண்டமான தொழில்நுட்பத்திற்குச் சென்றுவிட்டது, இவ்வளவிற்கும் கற்பனைக் கதைதான். ஆனால் உண்மையான வரலாற்றுச் சிறப்புடைய மன்னர்களைக் கொண்ட தமிழகத்தில் நமது வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்க ஒரு ஆள்கூட இல்லை என்பது மிக வேதனையான ஒன்று. தற்போது, திரிசா இல்லைனா நயன்தாரா என்ற அளவில்தான் இருக்கிறோம்.

    தமிழரின் சரித்திரங்கள், வரலாற்று உண்மைகளும் திரைப்படங்களாக வேண்டும்.

    English summary
    Here is a write up of Tamil Movies with sweet and bitter messages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X