புது பொண்டாட்டில்ல, அப்படித்தான் இருப்பாரு... மகன் உதயநிதியை கிண்டலத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லவ் டுடே திரைப்படத்தை விநியோகம் செய்திருப்பது உதயநிதி அவர்களின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான்.
அடுத்த வார இறுதியில் அவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் வெளியாகிறது. தடம், தடையற தாக்க போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தனக்கும் தனது தந்தையும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை உதயநிதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுவும் நீதானாப்பா...
இப்போது திரையரங்குகளில் என்ன படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அப்பா என்னிடம் கேட்டார். லவ் டுடே என்ற படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறினேன். அதை நீதான் வெளியிட்டாயா என்று கேட்க, ஆம் என்றேன். வேறு என்ன படங்கள் ஓடுகிறது என்று கேட்டபோது காஃபி வித் காதல் என்றேன். அதையும் நீ தான் விநியோகம் செய்கிறாயா என்று கேட்க ஆம் என்றேன். உடனே,"நீ எந்தப் படத்ததான் விட்டு வச்ச" என்று என்னிடம் நகைச்சுவையாக கூறினார்.

சிறப்பு காட்சி
பிறகு லவ் டுடே திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்யச் சொன்னார். படம் இந்தக் காலத்து காதலர்களுக்கு ஏற்றார் போல கதைக்களம் இருந்தாலும் எனக்கு அந்தப் படம் கனெக்ட் ஆனது. ஆனால் சமூக வலைதளங்கள் பற்றி நிறைய இருப்பதினால் அப்பாவிற்கு எப்படி படம் பிடிக்கும் என்ற சந்தேகத்துடன்தான் அப்பாவையும் அம்மாவையும் படம் பார்க்க அழைத்துச் சென்றேன். ஆனால் படம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

லவ் டுடே எஃபெக்ட்
படம் முடிந்தவுடன், படத்தில் வருவது போல நாமும் ஃபோன்களை மாற்றிக் கொள்ளலாம் என்று எனது அம்மா வேடிக்கையாக கூற அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று அப்பா மறுத்துவிட்டார். அந்த அளவிற்கு அவர்களும் படத்தை ரசித்துப் பார்த்தார்கள். ஆனால் அம்மாவிற்கு நான் சினிமாவில் நடிப்புத் தொழிலில் இருப்பதுதான் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

புது பொண்டாட்டி
நான் எம்.எல்.ஏவாக ஜெயித்த பின்னர் சில நாட்கள் என் தொகுதியில்தான் முழு நேரமும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மற்ற அமைச்சர்கள் அப்பாவிடம் ஃபோன் செய்து, தம்பி என்னங்க இப்படி பண்றாரு. அப்புறம் எங்க தொகுதியிலும் கேப்பாங்க என்று கூற, புது பொண்டாட்டில்ல... அப்படித்தான் இருப்பாரு என்று கிண்டல் அடித்தாராம். அதாவது, அரசியலுக்கு வந்து ஜெயித்து முதன்முறையாக ஆர்வமாக வேலை பார்த்ததால் என்னை அப்படி கிண்டலடித்தார் என்று உதயநிதி அந்தப் பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











