twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையரங்குகள் திறப்பு… எதிர்பார்த்த கூட்டம் இல்லை… புதுபடங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் !

    |

    சென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வராததால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டே இருந்தன.

    புதிய திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகி, அவை திரையரங்குக்கு வந்தால் மட்டுமே மக்கள் வருவார்கள். இதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

    அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருவதால் நிச்சயம் பெரிய நடிகர்களின் படங்கள் வரும் என்று பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள்.

    பழைய காதலனை நேருக்கு நேர் சந்தித்ததால் கடுப்பான நம்பர் நடிகை.. ஹோட்டலையே காலி செய்துவிட்டாராம்! பழைய காதலனை நேருக்கு நேர் சந்தித்ததால் கடுப்பான நம்பர் நடிகை.. ஹோட்டலையே காலி செய்துவிட்டாராம்!

    கண்ணுக்கு தெரியாத பிசாசு

    கண்ணுக்கு தெரியாத பிசாசு

    கண்ணுக்கு தெரியாத ஒரு அசுர அரக்கனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம். 2020ம் ஆண்டு தொடங்கிய உயிர் பயம் இன்னும் சற்றும் குறையாமல் நம்மை துரத்தி துரத்தி பந்தாடி வருகிறது. பள்ளிக்கூடங்கள் மூடல், கோவில்கள் மூடல், கடைகள், திரையரங்கு மூடல் என அனைத்தையும் மூடி இன்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம்.

    8 மாதங்களுக்கு பிறகு

    8 மாதங்களுக்கு பிறகு

    2020ம் ஆண்டு மார்ச்சில் மூடப்பட்ட திரையரங்கு கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டும் பயணம் ஏதும் இல்லை என்பது போல, கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. இதனால் ஊழியர்களுக்குச் சம்பளம், கரண்ட் பில் எனச் செலவைக் குறைக்கலாம் என்று பல்வேறு திரையரங்குகள் மூடப்பட்டன. இப்படி மூடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் சுமார் 300 வரை இருக்கும்.

    மாஸ்டர் ரிலீசானது

    மாஸ்டர் ரிலீசானது

    இழுத்து மூடிய திரையரங்குகள் புத்துயிர் பெற்றது விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வரவுக்கு பின் தான். பெரும் நஷ்டத்தை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் அதன் பிறகே பெருமூச்சுவிட்டனர். இதையடுத்து, சிம்பு நடித்த ஈஸ்வரன் மற்றும் கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படங்கள் வெளியாகி, மக்களை கொரோனா உயிர் பயத்தை சற்று தணித்து வந்த வேளையில், திடீரென பூதாகரம் எடுத்தது கொரோனா 2வது அலை.

    மீண்டும் திறப்பு

    மீண்டும் திறப்பு

    கொரோனா முதல் அலையே தேவலாம் என்று சொல்லும் அளவுக்கு கொரோனா 2வது அலை அனைவரையும் திக்குமுக்காடவைத்து, ஏராளமான உயிர்களை காவுவாங்கியது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், தற்போது 4 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இரு தினங்களுக்கு முன்புதான் அறிவிப்பு வெளியானதால், புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. மேலும், குறைவான அளவிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

    தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

    தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

    அதேபோல, தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள். நான் தடுப்பூசி போட்டுவிட்டேன் என்கிற பனியன் அணிந்துதான் பணிக்கு வருகின்றனர். மேலும், தியேட்டர் ஊழியர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கொரோனா விழிப்புணர்வு சிலைடுகள்

    கொரோனா விழிப்புணர்வு சிலைடுகள்

    அதேபோல, படம் பார்க்க வரும் ரசிகர்கள் பயன்படுத்தும் விதமாக ஒவ்வொரு வகுப்பு நுழைவு வாயிலும் சானிடைசர் வைக்கப்படும். ஒவ்வொரு காட்சியின் இடைவெளியிலும் தியேட்டர் முழுக்க சானிடைசர் தெளிக்கப்படும். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. கழிப்பிடங்களை போதிய சமூக இடைவெளியுடன் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விழிப்புணர்வு படங்கள், சிலைடுகள் திரையிடப்பட்டன. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்கு முன்னுரிமை தரப்படும். இதுபோன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    அக்‌ஷய் குமார் நடித்துள்ள இந்தி படமான பெல்பாட்டம், ஹாலிவுட் படமான காட்ஸில்லா vs கிங்காங், சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. இதில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இனி வரும் வாரங்களில் ரிலீசுக்கு காத்திருக்கும் சின்ன படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல, ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை, நெற்றிக்கண் போன்ற படங்களில் திரையிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை.

    தலைவி தியேட்டரில் ரிலீஸ்

    தலைவி தியேட்டரில் ரிலீஸ்

    கங்கனா ரணாவத் நடித்த தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதில் கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கிறார்,அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார், கலைஞர் கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கிறார். பல முறை இப்படத்தை ஒடிடியில் வெளியிட ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவை தோல்வி அடைந்தன. படக்குழு இப்படத்தை திரையரங்கில் மட்டுமே வெளியிடப்படும் என மிகவும் உறுதியாக இருந்தார். இதையடுத்து, இத்திரைப்படம் செப்டம்பர்10ந் தேதி வெளியாக உள்ளது. இதே போல பெரிய நடிகர்களின் படங்கள் ஒன்று இரண்டு வெளியானால், இயல்பு நிலை திரும்பும் என நம்பப்டுகிறது.

    English summary
    Theatre owners and distributors are happy that the government has finally permitted them to resume business after four months. but fans may have to wait for big film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X