»   »  பிக் பாஸ் வீட்டில் காலை வாரி விடும் தமிழ் நண்டுகள்

பிக் பாஸ் வீட்டில் காலை வாரி விடும் தமிழ் நண்டுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பார்த்தால் தமிழ் நண்டு கதை தான் நினைவுக்கு வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். ஓவியா, அனுயா, நமீதா, ரைசா ஆகியோர் தான் வெளிமாநிலத்தவர்கள். அதில் நமீதா, அனுயா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து பிந்து மாதவி வந்துள்ளார்.

காயத்ரி

காயத்ரி

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிலேயே எரிச்சலூட்டும் நபராக உள்ளார் காயத்ரி ரகுராம். அவர் நடந்து கொள்வதை பார்த்துவிட்டு திரையுலக பிரபலங்களே சமூக வலைதளங்களில் அவரை திட்டித் தீர்க்கிறார்கள்.

ஜூலி

ஜூலி

காயத்ரி சக தமிழர்களுடன் சேர்வது போன்று சேர்ந்து அவர்கள் முதுகில் குத்துகிறார். ஜூலியும் அதையே தான் செய்கிறார். இந்த இருவரின் செயல்களை பார்த்தால் தமிழ் நண்டு கதை தான் நினைவுக்கு வருகிறது.

ரம்யா

ரம்யா

காயத்ரியின் சேட்டைகளை பார்த்துவிட்டு கேரளாவை சேர்ந்த நடிகை ரம்யா நம்பீசன் சக மாநிலத்தவரான ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளார். அவருக்கு இருக்கும் பாசம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தமிழர்களுக்கு இல்லை.

சக்தி

சக்தி

சக்தி எந்த நிலையை எடுப்பது என்று தெரியாமல் குழம்புகிறார். சினேகனோ எப்ப சான்ஸ் கிடைக்கும் யாரை கட்டிப்பிடித்து தடவலாம் என்றே உள்ளார். என்னய்யா பிக் பாஸு இது?

English summary
The tamil contestants of Big Boss has no unity. They fight among themselves and pull each others' legs.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil