twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர் இல்லை.. புதுப்பட ரிலீஸ் இல்லை.. ஆனா.. தமிழ் ராக்கர்ஸில் மட்டும் கூட்டம் குறையல எப்படி?

    |

    சென்னை: ஏ கொரோனா வந்தாலும், தியேட்டர் மூடினாலும், புதுப்படம் ரிலீஸ் ஆகலைனாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என தமிழ் ராக்கர்ஸ் அட்மின் பாடிக்கொண்டிருப்பார் போல, அந்த அளவுக்கு தமிழ் ராக்கர்ஸ் இந்த நேரத்திலும், பயங்கர டிராபிக்காக இருக்கிறதாம்.

    Recommended Video

    Shriya Saran Quarantine Period | Namitha & Athulya Awarness

    கொரோனா அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த ஒரு புதிய படங்களும் வெளியாகவில்லை.

    கடந்த வாரம் ரிலீசான படங்களும், மூன்றே நாட்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டன.

    சினிமா எதிரி

    சினிமா எதிரி

    தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமையானால் வெளியாகும் புதுப்படங்களுக்கு ஒரு எதிரியாக ப்ளூ சட்டை மாறனும், இன்னொரு எதிரியாக தமிழ் ராக்கர்ஸும் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடினாலும், புதுப்படங்கள் வெளியாகாமல் இருந்தாலும், தமிழ் ராக்கர்ஸ் எந்தவொரு கவலையும் படாமல் ஜாலியாக இருக்கிறது.

    என்ன காரணம்?

    என்ன காரணம்?

    அதற்கான காரணம் என்னவென்றால், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் வெளியான அத்தனை படங்களின் ஹெச்.டி பிரிண்ட்களும் சுடச் சுட தமிழ் ராக்கர்ஸில் கிடைப்பது தான். தியேட்டர்களில் படங்கள் ஓடாததால், அமேசான் பிரைம், டென்ட்கொட்டா உள்ளிட்ட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் அவசர அவசரமாக தயாரிப்பாளர்கள் படத்தை விற்றுள்ளனர்.

    அலேக்கா

    அலேக்கா

    புதுப்படம் ரிலீசான உடனேயே, தியேட்டர் பிரிண்ட்டை ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரஸி வெப்சைட்டுகள், ஹெச்.டி. பிரின்ட் வெளியான அடுத்த நொடியில், அலேக்காக அங்கிருந்து தூக்கி, இலவசமாக மக்களுக்கு தானம் தர்மம் செய்து விடுகிறது.

    என்ன என்ன படங்கள்

    என்ன என்ன படங்கள்

    அசோக் செல்வனின் ஓ மை கடவுளே, துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், அருண் விஜய்யின் மாஃபியா, ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரெளபதி, நட்டி நடராஜின் காட்ஃபாதர் என அத்தனை புதிய படங்களின் ஹெச்.டி. பிரின்ட்டுகளும் தமிழ் ராக்கர்ஸில் கிடைப்பதால், நெட்டிசன்கள் வீட்டில் போராடிக்கும் இந்த நேரத்தில் புதுப்படங்களாக டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

    சம்பாதிக்கும் ஸ்ட்ரீமிங் தளங்கள்

    சம்பாதிக்கும் ஸ்ட்ரீமிங் தளங்கள்

    மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் இன்டர்நெட் பயன்படுத்தி, அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், ஜி5 உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் தளங்களில் காசு கொடுத்து கண்ணியமாக பார்க்கும் பொதுமக்களால், ஸ்ட்ரீமிங் தளங்களும் எக்கச்சக்கமாக இந்த நேரத்தில் பணத்தை சம்பாதித்து வருகின்றனர்.

    தலையில் துண்டு

    தலையில் துண்டு

    கோடிக்கணக்கில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும், மால்களையும் கட்டி விட்டு, லட்சக்கணக்கில் தினமும் சம்பாதித்துக் கொண்டிருந்த தியேட்டர் ஓனர்களுக்கு, கொரோனா வைரஸ் வந்ததும் வந்தது, மொத்தத்துக்கும் ஆப்பு வைத்து விட்டு, தலையில் துண்டு போட வைத்துள்ளது. பத்து ரூபாய் பாப் கார்னை 250 ரூபாய்க்கு விற்றால் பின்னே!

    English summary
    Tamil Rockers traffic not get decrease due to theaters shut down, All recent movies HD print downloading in that piracy sight rapidly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X