»   »  தமிழில் தள்ளிப் போனது ருத்ரமாதேவி!

தமிழில் தள்ளிப் போனது ருத்ரமாதேவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுஷ்காவின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி படம் மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது. தெலுங்கில் 9 ம் தேதி வெளியாகும் இந்தப் படம் தமிழில் சற்று தாமதமாக 16 ம் தேதி வெளியாகிறது.

Tamil Rudhramadevi Will be Releasing a Week Later

என்ன காரணம் என்று படக்குழுவினர் இது தொடர்பான எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை. தமிழில் தாமதமாக படம் வெளியாகிறது என்று மட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மற்ற மொழிகளில் 9 ம் தேதி வெளியாகிறதா அல்லது தமிழைப் போல தள்ளிப் போகிறதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ் ராஜ், நித்யாமேனன், கேத்தரின் தெரசா போன்ற ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ருத்ரமாதேவி.


13 ம் நூற்றாண்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் தெலுங்கின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான குணசேகர்.


Tamil Rudhramadevi Will be Releasing a Week Later

80 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ருத்ரமாதேவி தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்டிருக்கிறது.


Tamil Rudhramadevi Will be Releasing a Week Later

மற்ற மொழிகளான ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. 3D படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.


English summary
Rudhramadevi, which is directed by Gunasekhar, is scheduled to Worldwide release on October 9. But Tamil Rudhramadevi Will be Releasing a Week Later on 16th October.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil