»   »  தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே நெட்டில் கசிந்த 'பாகுபலி 2': மீண்டும் தமிழ் பதிப்பு தான்

தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே நெட்டில் கசிந்த 'பாகுபலி 2': மீண்டும் தமிழ் பதிப்பு தான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படம் தமிழகத்தில் இன்னும் ரிலீஸாகாத நிலையில் அதன் தமிழ் பதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பும் கூட தமிழ் பதிப்பின் காட்சிகள் தான் இணையத்தில் கசிந்தன.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் ப்ரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை.


மேலும் காலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.


படம்

படம்

தமிழகத்தில் பாகுபலி 2 படம் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழ் பதிப்பு சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.


அதிர்ச்சி

அதிர்ச்சி

முன்பும் கூட தமிழ் பதிப்பு தான் லீக்கானது. இந்நிலையில் மீண்டும் தமிழ் பதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


எப்படி?

எப்படி?

படம் பல்வேறு நாடுகளின் சென்சார் போர்டுகளை தவிர வேறு யாருக்கும் போட்டுக் காட்டப்படவில்லை. இந்நிலையில் தமிழ் பதிப்பு மட்டும் எப்படி கசிந்தது என்று படக்குழு வியக்கிறது.


பாகுபலி 2

பாகுபலி 2

பெரும் பொருட்செலவில் எடுத்த படம் இப்படி தமிழகத்தில் ரிலீஸாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகியுள்ளது ராஜமவுலி உள்ளிட்ட படக்குழுவினரை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.


English summary
Baahubali 2 movie's tamil version has got leaked on internet even before the movie gets released in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil