»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

வக்கீல்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் தமிழன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், "தமிழன்" படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சென்சார்போர்டுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அரிஸ்டாட்டில் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்கூறியுள்ளதாவது:

கடந்த தமிழ்ப் புத்தாண்டன்று வெளியான "தமிழன்" படத்தின் ஹீரோ ஒரு வக்கீலாக வருகிறார்.

இப்படத்தின் ஒரு காட்சியில் ஹீரோ தன் வாயில் சிகரெட்டுடன் வருகிறார். அதற்கு அவர் விளக்கம் அளிக்கையில்,பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, வாயில் வைத்துக் கொள்வதற்குஅல்ல என்று கூறுகிறார்.

இன்னொரு காட்சியில் நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் அதிகாரி ஒருவர் அதிகமான லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டுவருகிறார். ஹீரோ அதைச் சுட்டிக் காட்ட, அந்த நீதிமன்ற அதிகாரியும் உடனடியாக லிப்ஸ்டிக்கைத் துடைத்து சரிசெய்து விட்டு, சரியாக இருக்கிறதா என்று ஹீரோவிடம் கேட்கிறார்.

வக்கீல்களும் நீதிமன்ற அதிகாரிகளும் இப்படித்தான் பழகிக் கொள்வார்கள் என்ற தவறான கண்ணோட்டத்தைஇந்தப் படத்தைப் பார்க்கும் பொதுமக்களுக்கு இந்தக் காட்சி ஏற்படுத்துகிறது.

மேலும் வழக்குகளை இழுத்தடிப்பது வக்கீல்கள்தான் என்பது போன்ற முரணான காட்சிகளும் "தமிழன்" படத்தில்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் லோக் அதாலத் மற்றும் விரைவு நீதிமன்றங்களை அமைத்து தற்போதுநீதிமன்றம் வழக்குகளை விரைந்து முடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காட்சியில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும்போது,"எனக்குத் தண்டனை கொடுத்தால் என்ன? மேல் நீதிமன்றங்கள் எனக்கு விடுதலை கொடுத்து விடும்" என்றுகூறுகிறார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் படத்தில் வக்கீலாகவே வருகிறார்.

இப்படி "தமிழன்" படத்தில் வக்கீல்கள் மற்றும் நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள்அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற காட்சிகளுக்கு சென்சார் போர்டு தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய போர்டுதவறி விட்டது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

"தமிழன்" படத்தை உடனடியாகத் தடை செய்யாவிட்டால், அப்படம் தினந்தோறும் நீதிமன்றத்தையும்வக்கீல்களையும் களங்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.

எனவே இப்படத்தை உடனே தடை செய்ய உத்தரவிட வேண்டும். அப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சென்சார்சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும் என்று அம்மனுவில் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச், இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று அப்படத்தின்தயாரிப்பாளரான ஜீ.விக்கும், இயக்குநர் மஜீத்துக்கும் மற்றும் சென்சார் போர்டுக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

இந்தப் படத்தில் நுகர்வோர் குறைதீர்ப்பு நீதிமன்றங்கள் மூலம் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் காரெக்டரில் விஜய் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பேசும் விஜய், உயர் நீதிமன்றம் ஒரு தண்டனையைத் தருகிறது. அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அப்படியானால் உயர் நீதிமன்றம் ஏன் தவறான தண்டனை தந்தது. ஆக, சட்டத்தில்ஏதோ தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம். தீர்ப்புகளை எப்படி திருத்தலாம் என்று பேசுகிறார்.

இன்னொரு காட்சியில் தனது கட்சிக்காரர் கொலைகாரன் என்று தெரிந்த பின்னரும் அவனுக்காக வக்கீல்கள்வாதாடுவது சரியா? பணத்துக்காக வக்கீல்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? என்றும் கேட்கிறார் விஜய்.

இப்படி படம் முழுக்க பல நறுக் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு அடிப்படை சட்டங்கள் தெரிந்திருந்தால் தான் அவர்கள் தவறுகளை தட்டிக் கேட்பார்கள். எனவே,அசோகர் மரம் நட்டார் போன்ற பாடங்ளை எடுத்துவிட்டு பள்ளியிலேயே அடிப்படை சட்டக் கல்வியைக்கொண்டு வர வேண்டும் என்று இந்தத் திரைப்படத்தில் மெசேஜ் கூறப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் புத்தாண்டுக்கு வந்த படங்களில் தமிழன் தான் முதலிடத்தில் உள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil