»   »  ரஜினிகாந்த் - தமிழருவி மணியன் 'வழக்கமான' சந்திப்பு!

ரஜினிகாந்த் - தமிழருவி மணியன் 'வழக்கமான' சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்த்: தமிழருவி மணியன், ராஜு மகாலிங்கம்!

சென்னை: ரஜினி மக்கள் மன்றத் தலைவர் ரஜினிகாந்துடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று போயஸ் தோட்டத்தில் சந்தித்தார்.

ரஜினியின் அரசியல் வருகையை முதலில் உறுதிப்படுத்திய அரசியல் தலைவர் தமிழருவி மணியன். ரஜினியின் அரசியலை விளக்க ஒரு தனி மாநாடே நடத்தியவர்.

Tamilaruvi Maniyan meets Rajinikanth

மீடியாவும் அரசியல் உலகமும் ரஜினி அரசியலை சந்தேகத்தோடு பார்த்த போது, அதை உடைத்து ரஜினி வருகிறார், தனிக்கட்சி தொடங்குகிறார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என உறுதியாகத் தெரிவித்தவர்.

ரஜினிகாந்தின் அரசியல் முடிவுகள் அனைத்திலும் தமிழருவி மணியனின் ஆலோசனையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருவரும் ஏற்கெனவே பலமுறை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இன்றும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இருவரும் சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து தமிழருவி மணியன் கூறியபோது, "ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நான் ஏதும் சொல்ல முடியாது, அவரே தெரிவிப்பார்.

சந்திப்பு வழக்கமான ஒன்றுதான்," என்றார்.

ரஜினிகாந்த் இப்போது தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.

English summary
Gandhiya Makkal Iyakkam President Tamilaruvi Maniyan has met Rajinikanth at his residence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil