»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்திரையுலகம் புதிய பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறது. திரையுலகில்உள்ளவர்கள் இது ஆரோக்கியமான, சந்தோஷமான புதிய உலகிற்கு தமிழ்த்திரையுலகத்தை அழைத்துச் செல்கின்ற வழி என்கிறார்கள். நார்மல் பட்ஜெட் படங்கள்என்றாலே தற்பொழுது ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

இதுவரை படம் முடிக்கப்பட்டு வெளிவராமல் இருக்கும் படங்களின் எண்ணிக்கைமட்டும் சுமார் முந்நூறு. பணப்பற்றாக்குறை. திட்டமிட்ட படி, படத்தை எடுக்கமுடியாத சூழ்நிலை, தறிகெட்டுப்போன செலவுகள் என்று பெரிய லிஸ்டே வருகிறது.மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் கூட, சினிமா எதுக்கு நிறையபணத்தையும் கொட்டி, ஓடுமா, ஓடாதான்னு கவலையோடு கவனிக்கவும்வேண்டியிருக்கிறது

நடிகர், நடிகைகளின் சம்பளம், படப்பிடிப்பு தளத்தில் ஆகின்ற செலவுகள் என்றுஎல்லாமே தலைசுற்றுகின்றது.

மூன்று படங்கள் எடுக்க வேண்டிய பட்ஜெட்டில், இன்று ஒரு படம்தயாராகிக்கொண்டிருக்கிறது. இது தேவையில்லாத ரிஸ்க் என்றே தோன்றுகிறது.பேசாமல், 100 வாரம் 200 வாரம் என்று டெலிவிஷன் சீரிகளில் இறங்கிவிட்டால்பிரச்சனையே இல்லை. நஷ்டம் வராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு பலதயாரிாளர்கள் திரும்பிக் கொண்டிருக்க, தயாரிப்பாளர்கள் சங்கம் யோசிக்கஆரம்பித்தது

இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் ஒன்று இரண்டு படங்களே ரிலீஸாகும்என்கிற நிலை வந்துவிடும். இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்றுஆலோசித்தார்கள். அதன் பின் எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க முடிவைத்தான்சமீபத்தில் எடுத்திருக்கிறார்கள்.

சென்னையில் நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சற்றுஅதிரடியாக இருந்தாலும், இந்த முடிவுகளின் படி செயல்பட்டால் தயாரிப்புச் செலவில்நாற்பது சதவீதம் குறையும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர்சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது தான்.

முடிவுகளை வேண்டுகோளாக, நடிகர், நடிகைகளுக்கு அனுப்பியிருக்கிறோம்.அவர்கள் அதை ஏற்றுக்கொள்வேண்டும் என்றும் இப்ராஹிம் ராவுத்தர் குறிப்பட்டதுவரவேற்கத்தக்கதுதான்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவுகள்எடுக்கப்பட்டது. இதன் படி, நடிகர்கள் சம்பளம் குறைகிறது. படப்பிடிப்பில்செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. மும்பை நடிகையானாலும்மூன்று நட்சத்திர ஹோட்டலில்தான் தங்க வைக்கப்படுவார்கள். மேலும் நடிகைகளின்உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர் செலவழிக்க வேண்டியதில்லை என்றும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர்தலைமையில் சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டம் நடந்தது. கூட்டம்துணைத்தலைவர் ஏ.எல்.அழகப்பன், செயலாளர் சித்ரா லட்சுமணன் ஆகியோர்முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுஅறிவிக்கப்பட்டது.

நலிந்து வரும் சினிமா தயாரிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த 15-ம் தேதி நடிகர்சங்கத்தலைவருடன் தாயாரிப்பாளர் சங்கம் கலந்து பேசியது.

நடிகர் சங்கம் சார்பில் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார், உப தலைவர்நெப்போலியன், முரளி, விஜய், பிரபு,கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்பொழுது அவர்களுடன் கலந்து பேசி தயாரிப்புச் செலவுகளை குறைக்கும்விதத்தில் சில வழிமுறைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ளது.

இதன் படி தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை இஷ்டம் போல் கூட்டிக்கேட்கக்கூடாது.சம்பளத்தை அவரவர் படம் வியாபாரம் ஆவதைப் பொறுத்தே நிர்ணயிக்க வேண்டும்.

படம் ஆரம்பத்தில் சம்பளத்தில் பத்து சதவீதம் மட்டுமே அட்வான்ஸாகத் தரப்படும்.மீதிப்பணம் படப்பிடிப்பு முடியும் வரை விகிதாசாரமுறையில் வழங்கப்படும்.

நடிகர்கள் உடன் வரும் உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களுக்கு சம்பளம்மற்றும் செலவுகளை தயாரிப்பாளர்கள் ஏற்கமாட்டார்கள்.

குறிப்பாக ஒரு நடிகருக்கு ஒரு மேக்கப்மேன், ஒரு உடையலங்கார நிபுணர், அவரதுஉதவியாளர், சிகையலங்காரம் செய்பவர், தவிர, நடிக, நடிகையரின் உதவியாளர்கள்என்று அதிகப்பட்சமாக ஆட்கள் இருக்கின்றனர்.

இவர்களை தனிப்பட்ட நடிகருக்கு என்று இல்லாமல் கம்பெனிக்கு என்றுபொதுவானவர் ஒருவர் மட்டுமே இருப்பார். அப்படி நடிகர் தனிப்பட்ட முறையில்வைத்துக்கொண்டால் தயாரிப்பாளர் சம்பளமோ, பேட்டாவோ தரமாட்டார்.

நடிகைகளுடன் இது போன்ற பிரச்சனை மிகவும் அதிகமாக உள்ளது. வெளியூர்படப்பிடிப்பு என்றால் அதிகபட்சம் உணவு மட்டுமே வழங்கப்படும்.

படப்பிடிப்பு தளத்தில் செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது. ஹீரோ, டைரக்டர்கள்செல்போனில் மணிக் கணக்கில் பேசுவதால் படப்பிடிப்பு மிகவும் பாதிக்கப்படுகிறது.எனவே படப்பிடிப்பு தளத்தில் செல்போன் உபயோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டால் இதுவரை ஐந்து நட்சத்திர ஹோட்டல்ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இனி தயாரிப்பாளர்களின் நலன் கருதி அதிகபட்சம்மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்க மட்டுமே தயாரிப்பாளர் செலவு செய்வார்.

மேற்சொன்ன முடிவுகள் அனைத்தும் நடிகர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும்கலந்து பேசிவருகிறார்கள். திரும்பவும் இம்மாதம் 29-ம் தேதி நடிகர் சங்கம்,தயாரிப்பாளர்கள் சங்கம் உறுப்பினர்கள் கலந்து பேசுகிறார்கள். இதற்காக 29-ம் தேதிகாலை முதல் மாலை வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, திருட்டு வி.சி.டி இதன் கொடுமையால் தான் தயாரிப்பாளர்களுக்கு பெருத்தநஷ்டம் ஏற்படுகிறது. எனவே திருட்டு வி.சி.டி ஒழிப்புச் பிரசார படம் ஒன்று தீபாவளிரிலீஸ் ஆகும் படங்களுடன் நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் தோன்றி ரசிகர்களுக்குவேண்டுகோள் விடுவது போன்ற காட்சி காட்டப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் எஸ்.துரை, கே.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன்,எம்.ஆர்.கபார், பிரமிட் நடராஜன், ஏ.எம்.ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் பேசும் பொழுது, நடிகர்,நடிகைகளிடம் நாங்கள் எடுத்துள்ள முடிவுகளை வேண்டுகோளாக விடுத்துள்ளோம்.

அவர்களும் ஒப்புக்கொண்டு 29-ம் தேதி அறிவிப்பதாகச் சொல்லியுள்ளார்கள்.இப்படிச்செயல்பட்டால் தயாரிப்புச்செலவில் நாற்பது சதவீதம் குறையும்.

ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியம் என்று போகப்போகத்தான் தெரியும்.ஆட்குறைப்பு மூலம் தயாரிப்புச் செலவு குறைந்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டம்அடையாமல் பல படங்களை தொடர்ந்து எடுக்க உற்சாகம் கிடைக்கும். இதற்குஅனைவரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இப்ராஹிம் ராவுத்தர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil