»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆங்கிலத்தில் பரபரப்பு ஏற்படுத்திய "காந்தி திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் திரைக்கு வரும் இப்படத்தில் காந்தியாக நடித்தவருக்கு நடிகர் "சேது விக்ரம், டைரக்டர் வசந்த் ஆகியோர் தமிழ்க் குரல்கொடுத்துள்ளனர்.

தேசப் பிதா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு "காந்தி என்ற பெயரில் ஆங்கிலத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு சிலஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ டைரக்ட் செய்திருந்தார். படம் பெரிய அளவில்வெற்றி பெற்றது.

இப்போது இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி சார்பில் தமிழ் காந்திவிரைவில் வெளியிடப்படுகிறது. இந்நிறுவனத்தின் டெக்னிக்கல் டைரக்டராக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளார்.

படத்தில் காந்திஜியாக ஆங்கில நடிகர் பென்கிங்ஸ்லி நடித்திருந்தார். அவரது தமிழ் குரலுக்கு நடிகர் விக்ரம், டைரக்டர் வசந்த்ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். காந்திஜியின் இளமை பருவத்திற்கு ஒருவரும், முதுமை பருவதத்திற்குஇன்னொருவரும் குரல் கொடுத்துள்ளனர்.

இசைத் துறையில் டி.டி.எஸ்., டால்பி என திரையுலகம் புதிய பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதால், மோனோ பிரிண்ட்அனலாக்கில் வெளிவந்த ஆங்கில காந்தி தற்போது தமிழில் டி.டி.எஸ். சிஸ்டத்தில் நவீன இசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி.டி.எஸ். ஒலி அமைப்புடன் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்தை பார்த்த ஹாலிவுட் டெக்னீஷியன் ஜான்லார்சன்பெரிதும் பாராட்டியுள்ளார்.

தமிழில் தயாராகியுள்ள காந்தி படத்தை, பென்கிங்ஸ்லி பார்ப்பதற்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின்வரிச்சலுகையுடன் வருகிற 29ம் தேதி தமிழ் காந்தி திரைக்கு வருகிறார்.

Read more about: chennai, cinema, gandhi, tamil gandhi, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil