»   »  விஸ்வரூபம் 2 படத்துக்கு இலவச விளம்பரம் தேடுகிறார் கமல்! - 'ஆரம்பிச்சிட்டாங்க' தமிழிசை

விஸ்வரூபம் 2 படத்துக்கு இலவச விளம்பரம் தேடுகிறார் கமல்! - 'ஆரம்பிச்சிட்டாங்க' தமிழிசை

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஸ்வரூபம் 2 படத்துக்கு இலவச விளம்பரம் தேடுகிறார் கமல்! - தமிழிசை- வீடியோ

சென்னை: இந்து தீவிரவாதம் என்று பேசி தனது விஸ்வரூபம் 2 படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் கமல் ஹாஸன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சுமாரான படங்களையும் சூப்பர் ஹிட்டாக்குவது எப்படி என்ற வித்தையை சினிமாக்காரர்களுக்கே கற்றுத் தர ஆரம்பித்துள்ளனர் பாஜக தலைவர்கள்.

தமிழிசை - ராஜா

தமிழிசை - ராஜா

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் மெர்சல் படம், பெரிய வசூலைப் பெறுமா என பலரும் சந்தேகத்துடன் பார்க்க, அந்தப் படத்தை ரூ 200 கோடி வசூல் க்ளப்பில் சேர்த்த பெருமை தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் அவரது சகா எச் ராஜாவுக்கு உண்டு.

கைவிட்டுடாதீங்க

கைவிட்டுடாதீங்க

இதைப் பார்த்த மற்ற ஹீரோக்கள், தயாரிப்பாளர்களும் 'இதே பாணியில் எங்கள் படத்துக்கும் பப்ளிசிட்டி கொடுங்க... வசூல் பாத்துக்குறோம்.. கைவிட்டுடாதீங்க' என சீரியஸாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

எச் ராஜா

எச் ராஜா

பாஜகவினரும் அதைப் பெருமையாக நினைத்துக் கொண்டு அடுத்தடுத்து படங்களைப் பற்றிப் பேசி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின், "தமிழிசையும், ராஜாவும் எனது இப்படை வெல்லும் படத்துக்கும் பப்ளிசிட்டி தரவேண்டும்," என்று ஓபனாகப் பேச, உடனே ட்விட்டரில் உதயநிதியைக் கலாய்த்தார் ராஜா.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

இப்போது மீண்டும் ஒரு படத்தைக் கையிலெடுத்திருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். அது கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2. இந்தப் படம் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பிலிருக்கிறது. இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்துக்கு இலவச விளம்பரம் தேடத்தான் கமல் ஹாஸன் இந்து தீவிரவாதம் பற்றிப் பேசி வருகிறார் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai Soundarrajan says that Kamal Haasan is speaking Hindu Terrorism to gain free publicity for his long delayed movie Viswaroopam 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X