»   »  பிரபல இயக்குநரைக் கிண்டலடிக்கும் ‘தமிழ்படம்’!

பிரபல இயக்குநரைக் கிண்டலடிக்கும் ‘தமிழ்படம்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் படத்தில் வச்சு செஞ்ச இயக்குனர்..!!

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்து இரண்டாயிரத்து பத்தில் வெளிவந்த தமிழ்படம் ஞாபகத்தில் இருக்கிறதா? ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரன் ஆவது தொடங்கி ராமராஜன் உள்பட சகலத்தையும் கிண்டலடித்து வந்த படம்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த டீம் மீண்டும் பார்ட் டூவுக்காக களம் இறங்கியிருக்கிறார்கள். முதல் படத்தை தயாரித்த அதே ஓய்நாட் சசிதான் இதற்கும் தயாரிப்பாளர். கூடுதலாக ஒரு கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கிறார். மிர்ச்சி சிவா ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கியது எல்லாமே தெரிந்த செய்திதான்.

TamilPadam team takes on leading director

தெரியாதது- முதல் கட்டப் படப்பிடிப்பை அமெரிக்காவுக்குப் போய் நடத்தியிருக்கிறார் இயக்குநர் அமுதன். கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படப்பிடிப்பு நடந்த அதே லொக்கேஷனில்தான் பார்ட் டூ படமாக்கியிருக்கிறார்கள். தவிர,கவுதம் வாசுதேவ் போன வெளிநாட்டு லொகேஷனைத் தேடித்தேடி ஷூட் பண்ணியிருக்கிறார்கள். என்ன ஏதென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அதேதான்!

TamilPadam team takes on leading director

மொத்தப் படத்திலும் கவுதம் வாசுதேவ் மேனனை இருபது நிமிசத்துக்கு வச்சு செய்திருக்கிறாராம் இயக்குநர் அமுதன்! கவுதம் வாசுதேவ் மேனன் படம் பார்த்தாலும் ரசிக்கிற மாதிரி காட்சிகளை உருவாகியிருக்கிறார் என்கிறார்கள் பார்ட் டூ ஆட்கள்.

பார்த்து செய்யுங்க மக்கா!

English summary
Sources say that TamilPadam team is takes on leading director Goutham Menon in its sequel

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil