முன்னாடி ஷகீலா.. இப்ப ரஜினி, விஜய்.. மிரட்சியில் மலையாள சினிமா!

திருவனந்தபுரம்: முன்பெல்லாம் ஷகீலா படம் வெளியானால் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும். ஆனால் இப்போது ஷகீலா இல்லை... ஆனாலும் பழைய கதையே தொடருகிறது.. ஆனால் வேற ரூபத்தில்.

மலையாள சினிமாவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையான மிரட்டல் வந்துகொண்டேதான் இருக்கிறது. ஏதாவது ரூபத்தில் வந்து மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களை இவை பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றன.

முன்பு ஷகீலாவால் பல பிரச்சினைகளை சந்தித்தனர் சூப்பர் ஸ்டார் நடிகர்கள். இப்போது வேறு ரூபத்தில் மலையாள சினிமாவுக்கு சவால் வந்துள்ளது. அது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள்.

ஷகீலாவால் ஏற்பட்ட பாதிப்புகள்

ஷகீலாவால் ஏற்பட்ட பாதிப்புகள்

முன்பெல்லாம் ஷகீலா படங்கள் வெளியானால் அவ்வளவுதான்,, பிரபல நடிகர்களின் படங்கள் எல்லாம் வசூலில் படுத்து விடும். துடிக்க துடிக்க ஷகீலா படங்களைப் பார்க்க மலையாள ரசிகர்கள் குவிந்ததால், சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் வசூலில் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தன. ஒரு வழியாக ஷகீலா மோகம் குறைந்து அடியோடு இப்போது நின்றும் போய் விட்டது. இதனால் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் நிம்மதிப் பெருமூச்சை சந்திக்க முடிந்தது.

புதிய சவால்

புதிய சவால்

இப்போது புதிய சவால் ஒன்று வந்துள்ளது. இதை புதிய சவால் என்று சொல்ல முடியாது. நீண்ட கால சவால்தான். அதாவது எப்போதெல்லாம் தமிழில் மிகப் பிரபலமான நடிகர்களின் படங்கள் வெளியாகிறதோ அப்போதெல்லாம் மலையாள பிரபலங்களின் படங்களுக்குப் பாதிப்பு வந்து விடும். குறிப்பாக ரஜினி படங்கள். தற்போது விஜய் படங்கள், ரஜினி படங்களை விட கேரளாவில் சக்கை போடு போடுகின்றன.

விஜய் படங்கள்

விஜய் படங்கள்

விஜய் படங்கள் தமிழகத்தில் எப்படி பிரமாண்டமாக திரையிடப்படுகிறதோ அதேபோலத்தான் மலையாளத்திலும் சக்கை போடு போடுகின்றன. இங்கு என்னவெல்லாம் நடக்குமோ அதேதான் கேரளாவிலும் நடைபெறுகிறது. இங்கு எப்படியெல்லாம் ரசிகர்கள் உற்சாகமடைகிறார்களோ அதேபோலத்தான் கேரளாவிலும் விஜய் ரசிகர்கள் திருவிழாக் கோலம் பூண்டு விடுகிறார்கள்.

ஓரம் கட்டப்படும் சூப்பர் ஸ்டார்கள்

ஓரம் கட்டப்படும் சூப்பர் ஸ்டார்கள்

விஜய் படம் எப்போதெல்லாம் கேரளாவில் வெளியாகிறதோ, அதிகபட்சம் தியேட்டர்கள் அந்தப் படத்துக்குப் போய் விடுகிறது. மற்ற நடிகர்களின் படங்களை ஓரம் கட்டி விடுகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். காரணம், வசூல் செமத்தியாக கிடைக்கும் என்பதாலும், மலையாள ரசிகர்கள் விஜய் படங்களை அதிகமாக ரசிக்கிறார்கள் என்பதாலும்.

சர்கார் அதகளம்

சர்கார் அதகளம்

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சர்கார் வெற்றி பெற்றுள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட திரைகளில் சர்கார் ஓடுகிறது. இது மோகன்லாலின் சமீபத்திய படத்தை விட 2 மடங்கு அதிக திரை என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட் தமிழ்

சூப்பர் ஹிட் தமிழ்

சர்கார் என்றில்லை பரியேறும் பெருமாள், 96 உள்ளிட்ட படங்களும் கூட கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனாலும் கூட பிற மலையாளப் படங்களுக்கு வசூலில் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்கிறார்கள். மலையாளப் படங்கள் முன்பு போல இப்போது இல்லை, கலைப் படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த காலம் போய் விட்டது. அவர்களும் மசாலாவாக மாறி விட்டனர். ஆனாலும் மலையாள ரசிகர்களின் தமிழ் மோகம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X