»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ்த்திரை தொலைக்காட்சியின் சார்பில் 4 படங்கள் தயாரிக்கப்படவுள்ளன.

திருட்டு விசிடி மூலம் கேபிள் ஆபரேட்டர்கள் புதிய படங்களை ஒளிபரப்புவதற்கு எதிராக, தாங்களே புதிய படங்களை சின்னத்திரையில் ஒளிபரப்ப முடிவு செய்த திரையுலகினர் தமிழ்த்திரை என்ற டி.வி.சேனலைத் தொடங்கினர்.

தமிழ்த்திரை தொலைக்காட்சி சார்பில் 4 படங்கள் தயாரிக்கப்படவுள்ளன. ஞாபகம் வருதே என்ற படத்தை இயக்குனர் சேரனும், ஆறுவது சினம் என்ற படத்தை பி.வாசுவும், இனி என்ற படத்தை ரேவதியும் மற்றும் ஒரு பெயரிடப்படாத படத்தை பாரதிராஜாவும் இயக்குகிறார்கள்.

இதற்கான தொடக்க விழா ரெசிடென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

ஸ்னேகா, ரேவதி, மன்சூர் அலிகான், விக்னேஷ், பாண்டியராஜன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், தயாரிப்பாளர்கள் இப்ராஹிம் ராவுத்தர், கோவை தம்பி, சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன்,

இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்,ரவிக்குமார், ஆர்.வி.உதயக்குமார், சசி, ஒளிப்பதிவாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த்திரையின் நிர்வாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி சிறப்புரை ஆற்றினார்.

ஒன்றரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரிக்கப்படும் இந்தப் படங்கள் வாரந்தோறும் ஒளிபரப்பப்படும். தமிழ்த்திரை இம்மாத 3வது வாரத்திலிருந்து அதிகாரப்பூர்வ ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil