»   »  சின்ன கேப்டனுக்கு ஜோடியாகும் மும்பை அழகி

சின்ன கேப்டனுக்கு ஜோடியாகும் மும்பை அழகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழன் என்று சொல் படத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியனுக்கு ஜோடியாக மும்பை அழகியும், நடிகையுமான சோயா அப்ரோஸ் நடிக்கவிருக்கிறார்.

சகாப்தம் படம் பெரிதாக போகாத நிலையில் தற்போது தந்தை இருக்க பயமேன் என்று விஜயகாந்துடன் இணைந்து தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் சின்ன கேப்டன் என்று அழைக்கப்படும் சண்முகப் பாண்டியன்.


Tamizhan Endru Sol

ராஜா காலத்து கதையாக உருவாகும் இப்படத்தில் விஜயகாந்த் ராஜாவாக நடிக்கிறார். புதுமுக இயக்குநர் அருண் பொன்னம்பலம் இயக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.


தந்தையுடன் இறங்கும் தனயனுக்கு ஜோடியாக மும்பை அழகியும், நடிகையுமான சோயா அப்ரோஸ் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்திற்கு ஜோடி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


5 வருடம் கழித்து விஜயகாந்த் மீண்டும் நடிக்கும் படமென்பதால் அவரது ரசிகர்கள் விஜயகாந்தின் நடிப்பை முக்கியமாக அவரை ராஜாவாக பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


வரலாறு கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகும் தமிழன் என்று சொல் சோயா அப்ரோஸின் முதல் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.சூர்யா, விஜய்க்கு ஹிட் கொடுத்த கேப்டன் சின்ன கேப்டனை கரை சேர்ப்பாரா? பார்க்கலாம்.

English summary
Vijayakanth's Come Back Movie Tamizhan Endru Sol, Now Mumbai Actress Zoya Afroz Likely to Team Up with Vijayakanth Son Sanmuga Pandiyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil