»   »  ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணையாக நிற்கலாம்! - தமிழருவி மணியன்

ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணையாக நிற்கலாம்! - தமிழருவி மணியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் ஹாஸன் துணையாக நிற்கலாம் என்று கூறியுள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.

கமல் ஹாஸனின் சமீபத்திய அரசுக்கு எதிரான அதிரடி அறிவிப்புகள் குறித்து தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

Tamizharuvi Maniyan's appeal to Kamal

அதில், "நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு சிறந்த நடிகராக விளங்குபவர் கமல் ஹாஸன். இப்போது போகிற போக்கில் இந்த சிஸ்டம் கெட்டிருக்கிறது என்றும், எல்லாத் துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அமைச்சர்களின் எதிர்வினைகள் தரக்குறைவாக உள்ளன.

கமலை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசியதால் ஏற்பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் இப்போது அவரது எதிர்வினையாக உள்ளது.

ரஜினி உருவாக்கும் அரசியல் அமைப்பில் கமல் துணையாக நிற்பது ஏற்புடையதாக இருக்கும்.

அதிமுக மீது உள்ள கோபத்தை தணிப்பதற்கு அவர் திமுகவின் பக்கம் திசை திரும்பிப் போனால், அரசியல் அமைப்பு சீர்கெட்டுள்ளது என்பதற்கு சரியான அர்த்தம் இல்லாமல் போய்விடும்," என்றார்.

English summary
Gandhian People Movement President Tamizharuvi Maniyan appealed Kamal Hassan to support Rajini in politics
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil