அந்த விவகாரத்தில் என் அம்மா ரதி, கமல்ஹாசனிடம் பேச முயன்றார்.. நடிகை அக்‌ஷராவின் முன்னாள் காதலர் தகவல்!

By

மும்பை: அந்த விவகாரத்தில், கமல்ஹாசனிடம் என் அம்மா ரதி பேச முயன்றார் என்று அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் கூறியுள்ளார்.

நடிகை அக்‌ஷரா ஹாசன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள். இவருடைய அந்தரங்க புகைப்படங்கள் சில வருடங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகின.

இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிர்ச்சி அடைந்த நடிகை அக்‌ஷரா, இதுபற்றி போலீசில் புகார் அளித்திருந்தார்.

தனுஜ் விர்வானி

தனுஜ் விர்வானி

அந்த புகைப்படங்களை வெளியிட்டது, அக்‌ஷராவின் முன்னாள் காதலர், நடிகர் தனுஜ் விர்வானி என்று கூறப்பட்டது. நடிகர் தனுஜ், முன்னாள் தமிழ் ஹீரோயின் ரதியின் மகன். நடிகை ரதி, கமல்ஹாசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர். தனுஜ், தன் மீதான புகாரை அப்போது மறுத்திருந்தார்.

எப்படி கசிந்திருக்கும்

எப்படி கசிந்திருக்கும்

இந்நிலையில் இப்போது அளித்த பேட்டியில் அவரிடம் அந்த விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது: அக்‌ஷராவின் அந்த புகைப்படங்கள் வெளியானபோது, அவர் முதலில், அழைத்தது என்னைதான். அது 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இது எப்படி கசிந்திருக்கும் என்று கேட்டார்.

கேட்க விரும்பியது

கேட்க விரும்பியது

போனை ரிப்பேருக்கும் கொடுக்கவில்லை என்றும் சொன்னார். இதுபற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக அதிக வருத்தம் அடைந்தது நான்தான். பிறகு, இதை நான் செஞ்சிருப்பேன்னு நினைக்கிறாயா? என்றேன். அவர் இல்லை என்றார். நான் கேட்க விரும்பியது இதைதான் என்றேன்.

பேச்சை நிறுத்தினோம்

பேச்சை நிறுத்தினோம்

பிறகு மீடியாவில் நிறைய மோசமான விஷயங்கள் வெளியாயின. அப்போது பகிரங்கமாக என் பின்னால் அக்‌ஷரா நிற்கவில்லை. பிறகு நாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டோம். இதனால் மன அழுத்தம் அடைந்தேன். என் வேலை பாதிக்கப்படுமோ என்று கூட பயந்தேன். இந்த விஷயத்தில் என் அம்மா ரதி, அப்செட் ஆனார்.

குற்றவாளி என்று

குற்றவாளி என்று

அவர் இது தொடர்பாக கமல்ஹாசன் குடும்பத்தினரிடம் பேச நினைத்தார். நான்தான் வேண்டாம் என்று தடுத்தேன். அம்மா அப்போது போலந்தில் இருந்தார். என் பெற்றோர், அக்‌ஷராவுடன் நல்ல தொடர்பில் இருந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் சில மீடியா என்னை குற்றவாளி என்றே கருதியது. இவ்வாறு தனுஜ் விர்வானி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X