»   »  'ஆண்ட்ரியாவை கிஸ் பண்ணமாட்டேனு சொன்னேன்.. ஃபேவரிட் ஹீரோ விஜய்' - 'தரமணி' ஆட்ரியன்!

'ஆண்ட்ரியாவை கிஸ் பண்ணமாட்டேனு சொன்னேன்.. ஃபேவரிட் ஹீரோ விஜய்' - 'தரமணி' ஆட்ரியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆண்ட்ரியாவை கிஸ் பண்ணமாட்டேனு சொன்ன ஹீரோ

சென்னை : ராம் இயக்கிய 'தரமணி' திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் மகனாக நடித்தவர் ஆட்ரியன் நைட் ஜெஸ்லி.

கருகரு சுருள் முடி, துறு துறு கண்கள் என ரசிகர்களைக் கவர்ந்த ஆட்ரியன் கனடாவில் படித்து வருகிறார்.

'தரமணி' படத்தைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆட்ரியன்.

சுருள் முடி

சுருள் முடி

ஆட்ரியனுக்கு 'தரமணி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவரது கருகரு சுருள் முடிக்காகத்தானாம். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்ரியனை ஆப்பிள் ஜூஸ் குடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து ஓகே செய்தார்களாம்.

முத்தம் தரும் காட்சி

முத்தம் தரும் காட்சி

ஆண்ட்ரியா கன்னத்தில் முத்தம் தரும் காட்சி இடம்பெற்றிருந்ததாம். ஷூட்டிங்கின்போது அம்மா இருந்ததால் முத்தம் தரவில்லை. தெரியாத நபர்களுக்கு முத்தம் தர மாட்டேன்' எனச் சொல்லி அந்தக் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார் ஆட்ரியன். பிறகு எல்லோரும் சொன்னபிறகு முத்தம் தர சம்மதித்தாராம் ஆட்ரியன்.

விஜய் தான் ஃபேவரிட்

விஜய் தான் ஃபேவரிட்

தமிழ் சினிமாவில் எந்த நடிகரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, "விஜய் தான் பிடிக்கும். அவரோட ஃபைட் சீன்ஸ், ஆக்டிங், டான்ஸ் எல்லாம் பிடிக்கும். அவர் படத்தில் சேர்ந்து நடிக்கணும்" என தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

சமந்தா பிடிக்கும்

சமந்தா பிடிக்கும்

பிடித்த ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு சமந்தா என பதிலளித்தார் ஆட்ரியன். என்னை ஆண்ட்ரியா எப்போவும் சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பாங்க" என்றும் கூறியிருக்கிறார்.

பியர்ட் வாலா

பியர்ட் வாலா

'தரமணி' படத்தில் பியர்ட்வாலாவாக நடித்த வசந்த் ரவி ஆட்ரியனுக்கு காட்சிகளில் நடிக்கவும், டயலாக் பேசவும் சொல்லிக் கொடுத்தாராம். அவருடன் ஷூட்டிங் நாட்களில் ரொம்ப க்ளோஸாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

ராம் படம்

ராம் படம்

'ஆச்சி மசாலா' விளம்பரத்தில் நடிக்கவும், சுசி கணேசன் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். அடுத்து ராம் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார் ஆட்ரியன் நைட் ஜெஸ்லி.

English summary
Adrian knight jesly acts as Andrea's son role in 'Taramani' movie. Adrian says about Taramani, 'I refused to kiss Andrea, because I don't like to kiss strangers'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil