»   »  'ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யு/ஏ... பெண் 'ரா'வாக அருந்தினால் ஏ!' இதான் நம்ம சென்சார்!!

'ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யு/ஏ... பெண் 'ரா'வாக அருந்தினால் ஏ!' இதான் நம்ம சென்சார்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெளியாகியுள்ள தரமணி போஸ்டர்களில், தணிக்கைக் குழுவினரை ரொம்ப லாவகமாக குத்திக் காட்டியுள்ளனர்.

தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. காரணம் படத்தில் பெண் மதுவருந்துவது போல காட்சிகள் உள்ளதாம்.

Taramani producer hits censor

இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா... ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்," என்று பாராட்டினார்.

ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மதுவருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி ஏ சான்று வழங்கியுள்ளனர்.

ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது அதிகபட்சம் யு ஏதான் வழங்குகின்றனர்.

இதைக் குறிப்பிட்டுதான் இன்று போஸ்டரில் 'ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யு/ஏ... பெண் 'ரா'வாக அருந்தினால் ஏ! ஆக தரமணி ஏ! என்று குறிப்பிட்டுள்ளனர்.

தரமணி படத்தை ராம் இயக்கியுள்ளார். இரு தேசிய விருதுகள் பெற்ற ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியாகிறது!

English summary
The producer of Taramani has alleged the censor board for giving A to the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil