»   »  ஸ்ட்ரைக் எதிரொலி.... தரமணியை மீண்டும் வெளியிட்ட முன்னணி தியேட்டர்கள்!

ஸ்ட்ரைக் எதிரொலி.... தரமணியை மீண்டும் வெளியிட்ட முன்னணி தியேட்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து புதுப் படங்களை வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுத்தி வைத்திருப்பதால் முதல் நிலை அரங்குகள், மல்டிப்ளெக்ஸ்களில் மீண்டும் தரமணி படத்தை திரையிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியானது தரமணி படம். ராம் இயக்கத்தில் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்திருந்தார். ஆன்ட்ரியா - வசந்த் ரவி நடித்த இந்தப் படம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வசூலும் நன்றாகவே இருந்தது. படம் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், புதுப் படங்கள் வேறு எதுவும் வராததால், மீண்டும் தரமணியை இன்று திரையிட்டுள்ளன முன்னணி அரங்குகள். பத்துக்கும் மேற்பட்ட திரைகளில் இந்தப் படம் மீண்டும் வெளியாகியுள்ளது.

Taramani rerelease from Today

அதேபோல வேறு சில அரங்குகளில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் திரையிடப்பட்டுள்ளது.

English summary
Leading multiplexes are releasing Taramani again from today

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil