»   »  தாக்குப் பிடித்த தரமணி... கல்லா கட்டும் காசுமணி ஆனது!

தாக்குப் பிடித்த தரமணி... கல்லா கட்டும் காசுமணி ஆனது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தரமான படங்கள் தாமாக தோற்பதில்லை. முயற்சித்தால் பலமானவர்களுடன் கூட மோதி ஜெயிக்கலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது தரமணி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன்.

தயாரிப்பு தொடங்கிய நாள் முதல் பிரச்சினைகளுடன் பயணித்த தரமணி திரையில் விரியும் வரை சந்தித்த சங்கடங்கள் ஏராளம் என்பதை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விவரித்தார் இயக்குநர் ராம். தனுஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்த படங்கள் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான தியேட்டர்களில் திரையிடப்பட்டன. எஞ்சிய, கழித்துக்கட்டப்பட்ட தியேட்டர்களே தரமணி படத்திற்கு கிடைத்தன. தினமும் 400 காட்சிகள் மட்டுமே தரமணி கிடைத்தது. தனுஷ், உதயநிதி ஸ்டாலின் படங்கள் தலா 1200, 1000 காட்சிகள் என ஓடி கல்லா கட்டின.

Taramani sustains in Box Office

படிக்கிற புள்ள எங்க படிச்சாலும் சாதிக்கும் என்பதை தரமணி 400 காட்சிகள் மூலம் நிருபித்து கல்லா கட்டியது. ரீலீஸ் அன்று தொடக்க காட்சியில் ஆட்களே வராமல் காத்தாடிய தியேட்டர்கள் மாலை காட்சியிலிருந்து இளைஞர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது ஆச்சர்யம் இல்லை உண்மை.

தொலைக்காட்சிகளில் தரமணி விளம்பரம் இல்லை. பத்திரிகை விளம்பரம் மட்டுமே. இணையத் தளங்களும், பத்திரிகைகளும் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடித்து உரக்கக் கூவியதன் விளைவு, மாலைக் காட்சிக்கு தரமணி படம் பார்க்க இளைஞர்கள் வரக் காரணமானது. தரமான படங்களை ஊடகங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தோளில் தூக்கி சுமப்பார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவுக்கு உறுதிப்படுத்தியுள்ளன ஊடகங்கள்.

தமிழகமெங்கும் இளைஞர்கள் விரும்பும் படமாக தரமணி குறிப்பிடப் படுகிறது. மாற்று சினிமாவை முன்னெடுப்பவர்களுக்கு நம்பிக்கை தரும் படமாகியிருக்கிறது தரமணி. பலத்த போட்டிக்கிடையில் குறைவான காட்சிகள் மூலம் ஐந்து நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ 1.80 கோடி மொத்த வசூல் செய்திருக்கும் தரமணி அடுத்து வரும் நாட்களில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு, காட்சிகள் கூடுதலாக்கப்படலாம்.

-ஏகலைவன்

English summary
Box Office reports say that Ram's Taramani is sustaining box office with good collection

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil