»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
ஆர்த்தி அகர்வாலை நான் காதலிக்கவில்லை. நானும் அவரும் நல்ல நண்பர்களாகத் தான் பழகினோம் என்று நடிகர் தருண்கூறியுள்ளார்.

முன்னணி தெலுங்கு நடிகையான ஆர்த்தி அகர்வாலும், நடிகர் தருணும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், அவர்கள்விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெலுங்குப் படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந் நிலையில் இந்தக் காதல் தோல்வியடையவே ஆர்த்தி, டாய்லெட் கிளீனிங் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து வீடு திரும்பியுள்ளார்.இத்தனைக்கும் அமெரிக்காவில பிறந்து வளர்ந்த குஜராத்திப் பெண் ஆர்த்தி. சினிமா ஆசையால் அமெரிக்காவை விட்டு வந்தவர்.

இந் நிலையில் ஆர்த்தியின் இந்த தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்த தருண், இந்தக் காதலையே மறுக்கிறார்.

எனக்கும் ஆர்த்திக்கும் காதல் என்று வதந்தி பரவியபோதே அதை நான் மறுத்தேன். ஆனாலும் வதந்தி நிற்கவில்லை.

இருவரும் நண்பர்களாக தான் (ஹோ...) பழகினோம். நான் வளர்ந்து வரும் நடிகன். தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துவருகிறேன். என்னைப் பற்றி தவறாக வதந்தி பரவியிருப்பது வருத்தமாக உள்ளது.

ஆர்த்தி தற்கொலைக்கு முயன்றது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனக்கும் அவருக்கும்காதல் தோல்வி என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

எனக்கு ஆர்த்தி மட்டுமல்ல த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோருடனும் நல்ல நட்பும் பழக்கமும் உண்டு. ஒரு ஆண், பெண்ணுடன்சகஜமாகப் பழகுவது தவறா ? என்னுடைய நட்பில் எந்தக் குறையும் கிடையாது.

ஆர்த்தியுடன் நான் எந்தத் தவறான எண்ணத்துடனும் பழகவில்லை. அவரைக் காதலிக்கவும் இல்லை என்றார் தருண்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் தருண் இப்போது தமிழில் ரீமாசென்னுடன் இவன் யாரோ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

அஞ்சலியில் ரகுவரனின் மகனாக சிறுவனாக அறிமுகமான தருண், தெலுங்கில் இப்போது வேகமாய் வளர்ந்து வருகிறார்.ஆனால், தமிழில் இவர் இன்னும் பிளாப் ஹீரோ தான். தமிழில் இவர் ஏற்கனவே நடித்த உனக்கு 18, எனக்கு 20, புன்னகை தேசம்ஆகிய இரு படங்களும் தோல்வியடைந்துவிட்ட நிலையில் இவன் யாரோ இவரது மூன்றாவது முயற்சி.

படத்தை இயக்குவது புதுமுக இயக்குனரான சேகர் சூரி.

தருணின் தெலுங்கு மார்கெட்டை மனதில் வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் இந்தப் படத்தில் ரீமாசென்தவிர கஜாலாவும் இருக்கிறார். தமிழில் ரீமா போஸ்டரை பெரிதாக அடிக்கலாம். தெலுங்கில் கஜாலா முகத்தை போஸ்டரில்பெரிதாகப் போடலாம் என்ற ஐடியா.

படத்தில் இருவருக்கும், போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்ட வேண்டியது வேலை.

அப்படியே இருவரும் போட்டி போட்டவாரே, தருணை விழுந்து விழுந்து காதலிக்க வேண்டுமாம்.

என்னாது, தருணை காதலிக்கனுமா?.. பார்த்தும்மா.. பார்த்து.. !!!

Read more about: aarthi agarwal, affair, deny, tarun
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil