Don't Miss!
- News
பழனி மலைப்பாதை, இடும்பன், கடம்பன் அடிவார கோவில்களில் இன்று குடமுழுக்கு.. புனித நீர் ஊற்றி அபிஷேகம்!
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பேய் படங்களில் ட்ரெண்டிங்கை ஏற்படுத்திய பீட்சா படம்... 9 ஆண்டு கொண்டாட்டம்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2012 அக்டோபர் 19ம் தேதி வெளியான படம் பீட்சா.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அவருக்கு மட்டுமின்றி விஜய் சேதுபதிக்கும் கோலிவுட்டில் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அபிஷேக் காலில் விழுந்து கதறும் தாமரை... காற்றப்பட போவது யார்? பதற வைக்கும் புரமோ!
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் கொண்டாட்டத்தை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

பீட்சா படம்
நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான படம் பீட்சா. பேய் படங்கள் அதற்கு முன்பும் பின்பும் அதிகமாக வந்த போதிலும் இந்தப் படம் அதில் புதிய ட்ரெண்டிங்கை ஏற்படுத்தியது. அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில் அதகளம் செய்திருந்தார்.

சிறப்பான துவக்கம்
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் மிகச்சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. முன்னதாக சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர்களில் அவர் நடிக்காத நிலையில், இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் அவரது அப்பாவித்தனமான நடிப்பு பேசப்பட்டது.

சிறப்பான திரைக்கதை
சிவி குமார் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. உலகத்தரத்தில் படத்தின் காட்சி அமைப்புகளும் திரைக்கதையும் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ரசிகர்களை சீட்டின் நுனியில் தொடர்ந்து இருக்க வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

த்ரில்லிங் அனுபவம்
பீட்சா கடையில் வேலை பார்க்கும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் ஒருநாளில் நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை அமைத்திருந்தார் இயக்குநர். வெகுவாக த்ரில்லிங் அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்கு தந்தது. எந்த இடத்திலும் சறுக்காத திரைக்கதையை படம் கொண்டிருந்தது.

சிறப்பான இசை, ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டிருந்த கோபி அமர்நாத் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருந்தனர். படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக பேய் வீட்டில் மாட்டிக் கொள்ளும் விஜய் சேதுபதியில் நடிப்பு அசத்தல் ரகம்.

முக்கியமான படம்
பதட்டம், பயம் என அடுத்தடுத்த விஷயங்களை கொடுத்து ரசிகர்கள் அவரை அந்தப் படத்தில் கொண்டாட வைத்திருப்பார் விஜய் சேதுபதி. அவரது கேரியரில் இந்தப் படம் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. ரம்யா நம்பீசனும் இதுபோன்ற மனைவி கிடைக்க வேண்டுமே என்ற ஆசையை ரசிகர்களிடம் படத்தில் ஏற்படுத்தியிருந்தார்.

9 ஆண்டு கொண்டாட்டம்
இத்தகைய அருமையான கொண்டாட்ட அனுபவத்தை கொடுத்த இந்தப் படம் வெளிவந்து தற்போது 9 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் இந்தப் படத்தை வெளிவந்தபோது கொண்டாடியதுடன் தற்போதுவரை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு முறை இந்தப் படத்தை பார்க்கும்போது வித்தியாசமான அனுபவம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.