சியான் விக்ரமின் கோப்ரா ஹாட் அப்டேட் வெளியிட்ட படக்குழு
சென்னை : விக்ரம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் அதிகமான கேரக்டர்களில் நடித்துள்ளார். சிவாஜி, கமலுக்கு பிறகு ஒரே படத்தில் விக்ரம் அதிக கேரக்டர்களில் நடிக்கும் படம் இது.
விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மோத்திவ், பத்மபிரியா ஜானகிராமன், கனிகா, மிர்னாலினி ரவி, ஆனந்தராஜ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை அஜய் ஞானமுத்து டைரக்டர் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நிறுத்தப்பட்ட கோப்ரா ஷுட்டிங்
கோப்ரா படத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டன. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த படத்தின் வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதற்கு பிறகு பல காரணங்களால் பல மாதங்களாக இந்த படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கப்படாமல் இருந்தன.

அப்டேட் தந்த டைரக்டர்
நீண்ட காலத்திற்கு பிறகு கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளதாக டைரக்டர் அஜய் ஞானமுத்து ஃபோட்டோவுடன் அப்டேட் வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் க்ரீன் மேட்டால் அமைக்கப்பட்ட செட்டின் ஃபோட்டோவை தான் டைரக்டர் பகிர்ந்துள்ளார். அதோடு, இறுதியாக...இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்ற கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் ரஷ்யா செட்
ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டிய மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே செட் அமைத்து எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். கம்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் படத்தின் மீதமுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க போகிறார்களாம். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் வேலைகளை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

எப்போ ரிலீஸ் தெரியுமா
உலகை குறிவைக்கும் சைபர் வில்லனை கண்டுபிடிக்க உதவும் கணிதவியலாளராக விக்ரம் நடிக்கிறார். இதற்காக உயர் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை பயன்படுத்தி இருக்கிறார்களாம். இந்த காட்சிகளில் விக்ரம் நடித்து முடித்த பிறகு படத்தின் டீசரை வெளியிட போகிறார்களாம். 2022 ம் ஆண்டு கோடை விடுமுறையில் கோப்ரா படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

விரைவில் டீசர்
கோப்ரா படத்தில் விக்ரம் எத்தனை ரோல்களில் நடித்துள்ளார் என்பதை படக்குழுவினர் தொடர்ந்து ரகசியமாக வைத்துள்ளனர். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் பாதி முடிவடைந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்ய போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











