Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பதான் காவி பிகினி.. ஷாருக்கான், தீபிகா போஸ்டர்கள் கிழிப்பு... பஜ்ரங் தள் அமைப்பினர் ஆக்ரோஷம்
அஹமதாபாத்:
ஷாருக்கான்,
தீபிகா
படுகோனே,
ஜான்
ஆபிரஹாம்
நடித்துள்ள
பதான்
வரும்
25ம்
தேதி
ரிலீஸாகிறது.
முன்னதாக
பதான்
திரைப்படத்தில்
இருந்து
வெளியான
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
சர்ச்சையை
ஏற்படுத்தியிருந்தது.
பதான்
ஃபர்ஸ்ட்
சிங்கிளான
'பேஷ்ரம்
ரங்'
பாடலில்
தீபிகா
படுகோன்
காவி
நிற
பிகினியில்
படு
கிளாமராக
ஆட்டம்
போட்டிருந்தார்.
தீபிகாவின்
பிகினி
காவி
நிறத்தில்
இருப்பதை
கையில்
எடுத்துள்ள
இந்து
அமைப்புகள்
ஷாருக்கான்,
தீபிகா
படுகோனேவுக்கு
எதிராக
தொடர்ந்து
போராட்டத்தில்
ஈடுபட்டு
வருகின்றனர்.
FIFA
World
Cup
2022
:
உலகக்
கோப்பையை
அறிமுகம்
செய்த
தீபிகா
படுகோன்..
இணையத்தில்
பெருகும்
ஆதரவு!

காவி பிகினி சர்ச்சை
ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முக்கியமாக 2018க்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் பாலிவுட்டிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், பதான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 12ம் தேதி வெளியானது. அதில் ஷாருக்கானுடன் தீபிகா கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். ஆனால், தீபிகா காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்ததால் அது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அஹமதாபாத்தில் போராட்டம்
பதான் பட ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு எதிராக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் இந்தூரில் ஷாருக்கான், தீபிகா படுகோனின் உருவ பொம்மைகள் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது குஜராத் மாநிலம் அஹமதாபாத்திலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அல்பவன் மாலில் பதான் படத்தின் ப்ரோமோஷனுக்காக வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை அவர்கள் கிழித்து எறிந்துள்ளனர். மேலும், ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் மாலின் சில பகுதிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பதான் ரிலீஸில் சிக்கல்
ஷாருக்கான், தீபிகா படுகோனேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய இந்து அமைப்பினர், பதான் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கமாட்டோம் எனவும் கூறியுள்ளனர். இதனால் பதான் சொன்னபடி ஜனவரி 25ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள பதான், ஷாருக்கானுக்கு கம்பேக் படமாக அமையும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் பாடல் வெளியானது முதலே பாய்காட் சிக்கலில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் மெளனம்
காவி பிகினிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சென்சார் போர்டு தரப்பில் இருந்தும் பதான் படக்குழுவினருக்கு சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாம். இதனால் சர்ச்சைகள் இல்லாமல் பதான் திரைப்படம் வெளியாகுமா அல்லது காவி பிகினி சர்ச்சையால் பாய்காட் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே பதான் ட்ரெய்லர் வரும் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.