»   »  சிக்கிட்டாண்டா சிலம்பரசன்... ‘இது நம்ம ஆளு’ டீசரில் சிம்புவைக் கலாய்க்கும் சூரி!

சிக்கிட்டாண்டா சிலம்பரசன்... ‘இது நம்ம ஆளு’ டீசரில் சிம்புவைக் கலாய்க்கும் சூரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நிஜ வாழ்க்கையில் காதலர்களாக இருந்து, பின்னர் பிரிந்த சிம்பு - நயன் ஜோடி நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சிம்பு நடித்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், இது நம்ம ஆளு பட டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த டீசரைப் பார்க்கும் போதே சிம்பு - நயனின் நிஜக் காதல் கதைதான் ‘இது நம்ம ஆளு' படத்தின் கதையாக இருக்குமோ என யோசிக்க வைக்கிறார் பாண்டிராஜ். அதிலும் டீசரில் சிம்புவை அநியாயத்திற்கு கலாய்த்துள்ளார் நடிகர் சூரி.

இதோ டீசரில் வரும் சில வசனங்கள் உங்களுக்காக...

லவ் பண்றது தான் பொழப்பே...

லவ் பண்றது தான் பொழப்பே...

சிம்புவைப் பார்த்து நயன்தாரா கேட்கிறார், ‘நீ லவ் பண்ணியிருக்கியா?' எனக் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வகையில் சூரி, ‘லவ் பண்றத தானே நீங்க பொழப்பா வெச்சிருக்கீங்க' என பதிலளிக்கிறார்.

பொண்ணுங்கனா பிடிக்குமா...?

பொண்ணுங்கனா பிடிக்குமா...?

இதேபோல் மற்றொரு காட்சியில் நயன்தாரா, சிம்புவிடம் உனக்குப் பொண்ணுங்கன்னா பிடிக்குமா? எனக் கேட்கிறார். அதற்கு சூரி, ‘இவனுக்குப் பொண்ணுங்கன்னு எழுதினாலே பிடிக்கும்' என கமெண்ட் கொடுக்கிறார்.

உன்னை மட்டுமா...?

உன்னை மட்டுமா...?

மற்றொரு காட்சியில் ‘என்னை ஏன் இன்னும் லவ் பண்ற' எனக் கேட்கிறார் நயன். அதற்கு சூரி, ‘அவன் உன்ன மட்டுமா லவ் பண்றான்' என்கிறார்.

கேட்டுக்கு வெளில தான்...

கேட்டுக்கு வெளில தான்...

‘இவ தான் பொண்ணுனு மனசுல லாக் பண்ணிட்டோம்னு சொன்னா, அதுக்கு அப்புறம் வேற எவ வந்தாலும் கேட்டுக்கு வெளில தான்' என டயலாக் பேசுகிறார் சிம்பு, இதற்கு ‘செய்...' என்கிறார் சூரி.

சிக்கிட்டாண்டா சிலம்பரசன்...

சிக்கிட்டாண்டா சிலம்பரசன்...

‘உனக்கும் அந்த பொண்ணுக்கும் லவ் பிக்கப் எப்டி ஆச்சு' என சிம்புவிடம் போனில் கேட்கிறார் நயன். அதற்கு சூரி, ‘சிக்கிட்டாண்டா சிலம்பரசன்' என கவுண்டர் கொடுக்கிறார்.

அப்புறம் அடி தான்...

அப்புறம் அடி தான்...

இப்படியாக டீசர் முழுவதும் சிம்புவைக் கலாய்த்து பேசுகிறார் சூரி. ஒரு காட்சியில் இப்படியே பேசிட்டே இருந்த அப்புறம் அடி தான் என்பது போல சூரியை மிரட்டுகிறார் சிம்பு. டீசரின் முடிவில் சந்தானம் லேசாக முகம் காட்டுகிறார்.

எப்படியோ, படம் நகைச்சுவை கலந்த காதல் கதையாக இருக்கும் என நம்பிக்கை அளிக்கிறது இந்த டீசர்.

டீசர்

இது நம்ம ஆளு படத்தின் டீசர்

English summary
Idhu Namma Aalu is an upcoming comedy with Simbu and Nayanthara playing the lead. The film is directed by Pasanga fame Pandiraj and has music by Simbu's brother Kuralarasan, who is making his debut with the film.
Please Wait while comments are loading...