»   »  எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே.... 'ராஜாமந்திரி'யின் புதிய காதல் பாட்டு

எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே.... 'ராஜாமந்திரி'யின் புதிய காதல் பாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட் நடித்திருக்கும் புதிய படமான ராஜா மந்திரியில் இடம் பெறும் ஒரு பாடல் வரி 'எதிர்த்த வீட்டு காளி ஃப்ளவரே...'

இந்தப் பாடலுக்கு ஒரு டீசரையும் உருவாக்கியிருக்கிறார்களாம்.


Teaser for Raja Mandhiri duet song

படம் மற்றும் இந்தப் பாடல் குறித்து உஷா கிருஷ்ணன் கூறுகையில், "ராஜா மந்திரி' படத்தின் டைட்டிலே, அதன் கதையின் களத்தைச் சொல்லிவிடும்.


Teaser for Raja Mandhiri duet song

அண்ணன் தம்பி உறவு ஒருபக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே இந்தப் படத்தின் கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும்.


Teaser for Raja Mandhiri duet song

காதலும், அதன் கலாட்டாகளும் கலந்து இருந்தாலும், அண்ணன் தம்பி உறவுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளுக்கும், சென்டிமெண்ட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கனவு தேவதையை நினைத்து, உற்சாகமாகி காளி வெங்கட் பாடும் பாடலாக ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே' பாடல் அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் அருமையான இசையில், ஏ.சி.எஸ். ரவிசந்திரன் இப்பாடலைப் பாடியிருக்கிறார்," என்றார்.


Teaser for Raja Mandhiri duet song

ஷாலின் ஸோயா, வைஷாலி மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


Teaser for Raja Mandhiri duet song

'எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்' என்ற பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர். ரம்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பிஜி முத்தையா தனது பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இணைத் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார்.


English summary
A teaser will be released for a duet song in Kalaiarasan - Kali Venkat starrer Raja Mandhiri movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil