twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெக்னிக்கலாக மிரட்டும் ‘தி கிரே மேன்’: கோலிவுட் அசுரன் தனுஷுக்கும் செம்ம தரமான சம்பவம் தான் போல!

    |

    சென்னை: ஹாலிவுட்டில் ரூசோ பிரதர்ஸ் இயக்கிய 'தி கிரே மேன்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    ஹாலிவுட் நடிகர்களுடன் தனுஷும் இந்தப் படத்தில் ஒரு சிறப்பு பாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.

    'தி கிரே மேன்' குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், சில சிறப்பான சம்பவங்களையும் இந்தப் படம் அரங்கேற்றியுள்ளது.

    The Gray Man Review : தனுஷின் தி கிரே மேன் எப்படி இருக்கு...அசத்தலா - சொதப்பலா? The Gray Man Review : தனுஷின் தி கிரே மேன் எப்படி இருக்கு...அசத்தலா - சொதப்பலா?

    அதிக எதிர்பார்ப்பு

    அதிக எதிர்பார்ப்பு

    ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘தி கிரே மேன்' திரைப்படம் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. ‘கேப்டன் அமெரிக்கா', ‘அவெஞ்சர்ஸ்' போன்ற பிரமாண்டமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ரூசோ பிரதர்ஸ், ‘தி கிரே மேன்' படத்தை இயக்கியுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கோலிவுட் அசுரன்

    கோலிவுட் அசுரன்

    'தி கிரே மேன்' படம் ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடமும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கெல்லாம் ஒரே காரணம், கோலிவுட் அசுரன் தனுஷும் இந்தப் படத்தில் கமிட் ஆகியிருந்தார். இதனால், ‘தி கிரே மேன்' படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் போதெல்லாம், தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் காணப்பட்டனர். இறுதியாக தற்போது படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    கதை இதுதான்

    கதை இதுதான்

    கதையாகப் பார்த்தால் ‘தி கிரே மேன்' படத்தில் புதுமையாக எதுவும் இல்லை என்பதே விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. சிறையில் இருக்கும் ரியான் கோஸ்லிங்கை அழைத்துச் செல்லும் அமெரிக்காவின் சிஐஏ, ஒருவரை போட்டுத் தள்ளும் வேலையை அவருக்கு கொடுக்கிறது. அதை கச்சிதமாக முடிக்கும் ரியான் கோஸ்லிங்க்கு, கிறிஸ் எவன்ஸ் மூலமாக பிரச்சினை ஏற்படுகிறது. கிறிஸ் எவன்ஸ் ஏன் ரியான் கோஸ்லிங்கை கொலை செய்ய விரட்டுகிறார், அதன் பின்னணி என்ன? என்பது தான் மொத்த கதையும்.

    டெக்னிக்கலாக மிரட்டல்

    டெக்னிக்கலாக மிரட்டல்

    'தி கிரே மேன்' படத்தின் கதையை ஒருபக்கமாக ஓரம் கட்டிவிட்டு, டெக்னிக்கலாக பார்த்தால் செம்மையான அனுபவமாக இருக்கிறது. முதல் அரை மணி நேரம் மந்தமாக நகரும் திரைக்கதை, அதன் பின்னர் கார் சேஸ்ஸிங், விதவிதமான துப்பாகிகளில் இருந்து ‘டமால்... டுமீல்...' என சீறிப் பாயும் புல்லட்டுகளின் சப்தங்களோடு வேகமெடுக்கிறது. ட்ராம் வண்டியில் வரும் சண்டைக் காட்சி உள்ளபடி தரமான மேக்கிங்கில் உருவாகியுள்ளது. கட்டடத்தின் கண்ணாடியில் பார்த்து, ரியான் கோஸ்லிங் வில்லனை சுட்டுத் தள்ளும் காட்சி மரண மாஸ்.

    இசையும் ஒளிப்பதிவும்

    இசையும் ஒளிப்பதிவும்

    'தி கிரே மேன்' படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையின் வேகத்திற்கு நச்சென்று கை கொடுத்துள்ளன. ஹென்றி ஜேக்மேனின் பின்னணி இசை, காட்சிகளின் தேவைக்கேற்ற பிரமிப்பை ஏற்படுத்த தவறவில்லை. அதேபோல், ஸ்டீஃபன் வின்டனின் ஒளிப்பதிவு தாறுமாறாக ஓர்க் அவுட் ஆகியுள்ளது. அவரது கேமிரா சண்டைக் காட்சிகள், துப்பாகிகளில் இருந்து தெறிக்கும் தோட்டாக்களுக்கு இடையே அங்குமிங்குமாக ஓடி மேஜிக் செய்து அசர வைக்கின்றது. ஜெஃப் க்ரோத், பியட்ரோ ஸ்கேலியா ஆகியோரின் எடிட்டிங்கும் 'தி கிரே மேன்' படத்தின் பலமாக அமைந்துள்ளது. கதையாக ஒருபடம் வெற்றியடையவில்லை என்றாலும், மேக்கிங்கில் ரசிகர்களை எப்படி திருப்திப்படுத்தலாம் என்பதற்கு ‘தி கிரே மேன்' ஒரு உதாரணம்.

    கெட்டவனுக்கு நல்லவன்

    கெட்டவனுக்கு நல்லவன்

    ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் இருவரையும் விலக்கி வைத்துவிட்டு பார்த்தால், தனுஷின் பாத்திரம் அவருக்கு சரியாகப் பொருந்தியுள்ளது. அவிக் சேன் என்ற பாத்திரத்தில் கொடூரமான கூலிப்படைத் தலைவனாக வரும் தனுஷ், கெட்டவனாக இருந்தாலும் குழந்தைகள், பெண்களை கொலை செய்வதில் விருப்பம் இல்லாத நல்லவனாகவே காட்டியுள்ளனர் இயக்குநர்கள். அவரது அறிமுக காட்சியும், ‘ஹலோ மை செக்ஸி தமிழ் ஃபிரண்ட்' என கிறிஸ் எவன்ஸ் தனுஷை அழைக்கும் காட்சியும் அவரது ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா எனலாம்.

    Recommended Video

    Dejavu Public Review | Dejavu Movie Review | Dejavu Tamil Cinema Review | Arulnidhi|*Review
    ஆக்சன் அசுரன்

    ஆக்சன் அசுரன்

    தனுஷுக்கு இரண்டே காட்சிகள் தான் என்றாலும், அதிலும் அவர் ஆக்சனில் அழுத்தமாக ஸ்கோர் செய்ய ரூசோ பிரதர்ஸ் வாய்ப்புக் கொடுத்துள்ளனர். ரியான் கோஸ்லிங் தனுஷை ‘பொடிப்பையன்' என கலாய்க்க, பதிலுக்கு தனுஷ் அவரை பந்தாடும் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியிலும் தனியாளாக கிறிஸ் எவான்ஸ் கோட்டைக்குள் என்ட்ரி ஆகும் தனுஷ், அங்கும் கெத்து காட்டியிருப்பார்.

    English summary
    The Rousso brothers, who have made 'The Gray Man' a technically intimidating film: also given due importance to actor Dhanush (‘தி கிரே மேன்’ படத்தை தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலாக உருவாக்கியுள்ள ரூசோ சகோதரர்கள், நடிகர் தனுஷுக்கும் சரியான முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X