»   »  பெப்சியில் மீண்டும் இணைக்கக்கோரி டெக்னீஷியன் யூனியன் உண்ணாவிரதம்

பெப்சியில் மீண்டும் இணைக்கக்கோரி டெக்னீஷியன் யூனியன் உண்ணாவிரதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பிற்கும் மோதல் உருவாவதற்கு மூல காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன்.

மதுரையில் நடந்த 'பில்லா பாண்டி' படப்பிடிப்பை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்தது.

இதனால் சமாதானப் பேச்சு வார்த்தையின் போது தயாரிப்பாளர்கள் சங்கம் இனி ஒரு போதும் டெக்னீஷியன் யூனியனை பயன்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தது.

பெப்சியில் இருந்து நீக்கம் :

பெப்சியில் இருந்து நீக்கம் :

இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் மோதல் ஏற்பட்டு பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெக்னீஷியன் யூனியன் பெப்சியிலிருந்து நீக்கப்பட்டது.

ஆட்கள் தேவை அறிவிப்பு :

ஆட்கள் தேவை அறிவிப்பு :

அதோடு, சினிமாவில் பணிபுரிவதற்கு அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய டெக்னீஷியன்கள் தேவை என்கிற அறிவிப்பும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது.

மீண்டும் இணைக்க கோரிக்கை :

மீண்டும் இணைக்க கோரிக்கை :

இந்நிலையில், தங்களை மீண்டும் பெப்சியில் சேர்க்கக்கோரி டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தனபால் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தொடர் உண்ணாவிரதம் :

தொடர் உண்ணாவிரதம் :

'டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நடைமுறையில் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வந்த சம்பளத்தைத் தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த இரண்டையும் நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' எனத் தெரிவித்துள்ளனர்.

English summary
The technicians union was reason for the conflict between the Producers council and FEFSI. So, the Technician Union has been removed from the FEFSI. People from the Techincian Union were fasting to insist rejoin with FEFSI.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil