Mirai FIrst Review: ’மிராய்’ முதல் விமர்சனம்.. கரண் ஜோஹரே வாயை பொளந்துட்டாராம்!
மும்பை: தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா சூப்பர் ஹீரோ திரைப்படம் 'மிராய்'. இந்த திரைப்படம் செப்டம்பர் 12 அன்று வெளியாகவுள்ளது. கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள இந்தப் படம், இந்திய திரையுலகில் சூப்பர் ஹீரோ படங்களுக்கான வரையறையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்து நடிகர் தேஜா சஜ்ஜா அண்மையில் Zoom உடனான நேர்காணலில் உரையாடினார். இதில் கரண் ஜோஹர், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோர் 'மிராய்' படத்திற்கு அளித்த ஆதரவு குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், இந்த படத்தை பார்த்த பின்னர், கரண் ஜோஹர் அளித்த முதல் விமர்சனம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. கடந்த வாரம் பாகி 4, மதராஸி, காந்தி கண்ணாடி, கான்ஜூரிங் தி லாஸ்ட் ரைட்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இந்த வாரம் மிராய் படம் மிரட்டலாக வெளியாக போகிறது. ஃபேண்டஸி பட பிரியர்களுக்கு இந்த படம் வேறலெவல் ட்ரீட்டாக அமையும்.
மிராய் முதல் விமர்சனம்: கைதி படத்தை பார்த்து விட்டு கரண் ஜோஹர் சூப்பராக இருக்கு என பாராட்டிய நிலையில், அந்த படம் இந்தியாவை தாண்டி பல வெளிநாடுகளில் கூட டப் செய்யப்பட்டு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில், மிராய் படத்தை பார்த்த கரண் ஜோஹர் படத்தின் முதல் பாதி அல்டிமேட்டாக உள்ளது என்றும் சூப்பர் ஹீரோ படங்களை இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் எப்படி எடுத்து சாதித்துள்ளீர்கள் என்கிற கேள்வியை படக்குழுவை பார்த்து எழுப்பி ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார்.
படத்தில் அம்மா ஸ்ரேயாவுக்கும் தேஜா சஜ்ஜாவுக்கும் உள்ள சென்டிமென்ட் டச் செல்லாம் கரண் ஜோஹரையே கண்கலங்க வைத்து விட்டதாம். கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் அந்த கிளைமேக்ஸ் போர்ஷன் எல்லாம் தியேட்டரில் கண்டிப்பாக விஷுவல் ட்ரீட் தான் என்றும் தானே இந்த படத்தை வட இந்தியாவில் ரிலீஸ் செய்வதாகவும் கூறிவிட்டார்.
படத்தை வெளியிடும் கரண் ஜோஹர்: கரண் ஜோஹரின் ஆதரவு குறித்து தேஜா சஜ்ஜா பேசுகையில், "'மிராய்' படம் கரண் ஜோஹரை மிகவும் கவர்ந்தது. இதன் காரணமாக அவர் வட இந்தியாவில் படத்தை விநியோகிக்க முன்வந்தார். 'மிராய்' திரைப்படம் ஒரு பெரிய தளத்தை அடைய வேண்டும் என அவர் விரும்பினார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைப் பழக்கமில்லை; சில முறை மட்டுமே சந்தித்துள்ளோம். இருந்தபோதிலும், அவர் படத்திற்கு ஆதரவு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
சிரஞ்சீவி பாராட்டு: சிரஞ்சீவியின் பாராட்டு குறித்து பேசிய சஜ்ஜா, "'மிராய்' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு, எனது திரையுலக பயணத்தின் ஆரம்ப காலப் படங்களின் போது அவருடன் இணைந்து நடித்த சிரஞ்சீவி, எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். நாங்கள் பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம்," என்று கூறினார்.

ஓஜி சூப்பர் ஹீரோ ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டைப் பற்றி தேஜா சஜ்ஜா பேசுகையில், "'மிராய்' ட்ரெய்லர் வெளியானதும், ரஜினிகாந்த் எனக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அவரை நான் 'ஓஜி சூப்பர் ஹீரோ' என்றுதான் அழைப்பேன். அவரைப் போன்ற ஜாம்பவான்கள் என்னை ஊக்குவிக்கும்போது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது," என்றார்.
நீங்கள் ரஜினிகாந்தின் ரசிகரா என்று கேட்டபோது, "நிச்சயமாக நான் அவரது ரசிகன்தான்! இந்த நாட்டில் அவருக்கு யார் ரசிகர் இல்லை?" என்று புன்னகையுடன் பதிலளித்தார்.
'மிராய்' படத்தில், தேஜா சஜ்ஜா ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட போர்வீரனாக நடித்துள்ளார். ஒன்பது புனித நூல்களைப் பாதுகாப்பதே அவரது பணி. இந்த நூல்களை தவறாகப் பயன்படுத்தினால் ஒருவர் கடவுளாக மாற முடியும். தனது சக்திகளை வெளிப்படுத்தி, ஆபத்தான சக்திகளைத் தடுக்கும் அவரது பயணத்தை இந்தப் படம் விவரிக்கிறது. இப்படத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாகவும், மஞ்சு மனோஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஸ்ரேயா சரண், ஜகபதி பாபு, ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











