»   »  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என தெரியணும்: லீவு லெட்டர் எழுதிய போலீஸ்காரர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படம் பார்க்க விடுமுறை கோரி தெலுங்கானாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

Telangana policeman applies for leave to watch Baahubali 2

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வாரங்காலை சேர்ந்த போலீஸ்காரரான விஜயகுமார் என்பவர் பாகுபலி 2 படம் பார்க்க விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். அதனால் வரும் 28ம் தேதி ரிலீஸாகும் பாகுபலி 2 படத்தை பார்க்க விரும்புகிறேன்.

எனவே, 28ம் தேதி எனக்கு விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
A policeman from Warangal has applied for leave on april 28th to watch Baahubali 2 just to know why Kattappa killed Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil