கழிவறையில் நடந்த பாலியல் பலாத்காரம்.. பெண் அளித்த புகார்.. சின்னத்திரை நடிகர் கைது!
சென்னை: நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சின்னத்திரை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த நடைபெற்ற விருந்துக்கு அழைத்து, கழிவறையில் வைத்து தான் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அந்த சின்னத்திரை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கபூருக்கும் பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைத் தொடர்ந்து, தனது நண்பரின் வீட்டில் நடந்த விருந்துக்கு அவரை அழைத்துள்ளார். அங்கு தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விருந்தின் போது பாதிக்கப்பட்ட பெண் கழிவறைக்கு சென்ற போது, கபூரும் கழிவறைக்குள் சென்றுள்ளார். இவர்கள் இருவரும், நீண்ட நேரமாக வெளியே வராததால், அவரது நண்பரும் மற்ற விருந்தினர்களும் கதவைத் தட்டி உள்ளனர். இதனால், சண்டை மூண்டதாகவும், இந்த சண்டை குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் தெரித்து இருக்கிறது. நான் பாதிக்கப்பட்ட பெண், ஆனால், கபூரின் நண்பரின் மனைவி தன்னைத் தாக்கியதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் கைது: இதுகுறித்து, வடக்கு மண்டல துணை ஆணையர் ராஜா பந்தியா வழக்குப்பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், கபூர் மற்றும் அவரது நண்பர் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு பெண் தன்னைத் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 21 அன்று, கபூரின் நண்பரும் அவரது மனைவியும் முன்ஜாமீன் கோரியதை அடுத்து அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த நடிகர் கபூரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் அவரை பல இடத்தில் தேடி அலைந்தனர். பின் புனேவில் தலைமறைவாக இருந்த கபூரை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ எடுத்தனர்: மேலும் தான்,பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை, வீடியோ எடுக்கப்பட்டதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்த வீடியோவும் கிடைக்கவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகர் ஒருவர் பாலியல் வழக்கில் சிக்கியது பெரும் பேசுபொருளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











