Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தற்கொலைக்கு காரணம் கர்ப்பமா? நடிகை துனிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!
மும்பை : நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு காரணம் அவர் கர்ப்பமாக இருந்தது தான், என இணையத்தில் செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
20வது வயதே ஆன,நடிகை கடந்த சனிக்கிழமை, படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனீர் இடைவேளையின் போது தனது மேக்கப் அறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த படக்குழுவினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படப்பிடிப்பு
தளத்தில்
நடிகை
தற்கொலை..வசமாக
சிக்கிய
காதலன்..
திடுக்கிடும்
தகவல்!

காதலன் கைது
நடிகை துனிஷா சர்மாவின் தாய், ஷீசன் முகமது கான் தான் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் என்று புகார் அளித்துள்ளார். அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கியதாகவும், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், ஷீசன் முகமது கான் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தாய் புகார் கூறியிருந்தார். இதையடுத்து, மும்பை போலீசார் நடிகர் ஷீசனை, ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்தனர்.

தற்கொலைக்கு காரணம் கர்ப்பமா?
துனிஷா சர்மாவின் காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், துனிஷா சர்மா கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால், காதலன் ஷீசன் முகமது கான் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் மேலும், துனிஷாவின் தொலைபேசியை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி படப்பிடிப்பு தளத்தில் துனிஷா பேசி உள்ளார். ஆனால், ஷீசன் முகமது கான் கண்டுகொள்ளாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக பலவிதமான வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.

பிரேத பரிசோதனை அறிக்கை
இந்நிலையில், நடிகை துனிஷா சர்மாவின பரிசோதனை அறிக்கையை மும்பை ஜேஜே மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, துனிஷா சர்மாவின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இறுதி சடங்கு நடைபெற்றன.

கண்கலங்கிய தோழி
இதையடுத்து, நடிகை துனிஷா சர்மாவின் தோழியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், துனிஷாவின் தந்தை சிறுவயதில் உயிரிழந்ததில் இருந்தே அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால், அவரது தாய் துனிஷா உடன் எப்போதும் இருப்பார் என்றார். ஆனால், எப்போதும் சிரித்துக்கொண்டே அனைவர் இடத்திலும் அழகான பேசும் சுபாவம் கொண்ட ஒரு மகிழ்ச்சியான பெண் என அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.