For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஜித்தின் ஏகே 61 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்...இப்போ யார் தெரியுமா?

  |

  சென்னை : 'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு 'ஏகே61' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த முதல்கட்ட ஷுட்டிங் ஜுன் மாதத்தில் நிறைவடைந்தது.

  ஏப்ரல் மாதமே படம் துவங்கப்பட்டு விட்டதால் மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டைட்டில் போன்றவை வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல் தயாரிப்பாளர் போனி கபுர் மெளனமாக இருந்து விட்டார்.

  பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா? பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா?

  அமைதி காக்கும் ஏகே 61 டீம்

  அமைதி காக்கும் ஏகே 61 டீம்

  முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் முடிந்து விட்டதால், இரண்டாம் கட்ட ஷுட்டிங் புனேயில் ஜுலை மாதத்தில் துவங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்குள் தனது ஃபேவரைட் பிஎம்டபிள்யு பைக்கை எடுத்துக் கொண்டு, ஐரோப்பிற்கு பைக் டுர் கிளம்பி சென்று விட்டார். சரி மற்ற நடிகர், நடிகைகளை வைத்து புனேயின் ஷுட்டிங் நடத்த போகிறார்கள் என்று பார்த்தால் படக்குழு சத்தம் காட்டாமல் உள்ளது.

   இப்போ டூர் ரொம்ப முக்கியமா

  இப்போ டூர் ரொம்ப முக்கியமா

  இதற்கிடையில் இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட ஏகே 61 படம் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி போவதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் அப்செட் ஆகினர். ஷுட்டிங்கை பாதியில் நிறுத்தி விட்டு அஜித், பைக் டூர் போனதால் தான் ரிலீஸ் தள்ளி போவதாக கடுப்பாகினர்.

   டூர் போக இதுதான் காரணமா

  டூர் போக இதுதான் காரணமா

  ஆனால் விசாரித்ததில் படத்தில் அஜித் இரண்டு கெட்அப்களில் நடிக்கிறார். வயதான கெட்அப்பில் நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் காட்சிகளில் ஏற்கனவே நடித்து முடித்து விட்டதால், ஐரோப்பா டிரிப் முடித்து வந்த பிறகு அஜித் மற்றொரு கெட்அப்பிற்கு மாற உள்ளதாக சொல்லப்படுகிறது. க்ளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய காட்சிகளில் அஜித் இந்த புதிய கெட்அப்களில் தான் தோன்ற உள்ளதால், அதை ரகசியமாக வைக்க இப்போதே கிளம்பி டூர் சென்று விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டதால் ரசிகர்கள் சமாதானம் ஆகினர்.

  அடுத்து எங்க ஷுட்டிங்

  அடுத்து எங்க ஷுட்டிங்

  விரைவில் அஜித் இந்தியா திரும்பிய பிறகு புனே மற்றும் வட சென்னையில் நடக்க உள்ள ஷுட்டிங்குகளில் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டது. ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா,சமுத்திரக்கனி, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.

  ஏகே 61 ல் இணைந்த தெலுங்கு வில்லன்

  ஏகே 61 ல் இணைந்த தெலுங்கு வில்லன்

  இதனிடையே,இந்தப் படத்தில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற அஜய் இணைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.சமீபத்தில் வெளியான 'தி வாரியர்' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் அஜய். ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தில் தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக அறிமுகம் ஆன நிலையில், தற்போது ஏகே 61 ல் தெலுங்கு வில்லன் அஜய் நடிக்க உள்ளார்.

  English summary
  According to sources Telugu villian actor Ajay to join in Ajithkumar AK 61 movie. He recently play a vital role in The Warrior movie. Already telugu actor Karthikeya played antagonist in Ajith's Valimai. Now Ajay to join in AK 61.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X