புஷ்பா படம் கொடுத்த தரமான கம்பேக்… விளம்பரங்களில் நடிக்க கோடிகளை குவிக்கும் அல்லு அர்ஜுன்

ஐதராபாத்: தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

புஷ்பா முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், அல்லுர் அர்ஜுனின் மார்க்கெட்டும் உச்சம் தொட்டுள்ளது.

பாலிவுட் நடிகர்களை விடவும் அல்லு அர்ஜுன் அதிகமான விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுனின் வெறித்தனமான கம்பேக்

அல்லு அர்ஜுனின் வெறித்தனமான கம்பேக்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கிய அல்லு அர்ஜுன், இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா திரைப்படம், அல்லு அர்ஜுன் கேரியரில் தரமான சம்பவமாக அமைந்தது. ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். மேக்கிங்கில் வேறலெவலில் மிரட்ட, அல்லு அர்ஜுன் அசுரத்தனமாக நடித்து மெர்சல் செய்திருந்தார்.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் புஷ்பா 2

எதிர்பார்ப்பின் உச்சத்தில் புஷ்பா 2

'புஷ்பா' முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் அதேக் கூட்டணியில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் 2ம் பாகம் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் மட்டுமே 400 கோடிக்கும் வசூல் செய்த புஷ்பா, இரண்டாம் பாகம் வெளியானதும் 1000 கோடி கிளப்பில் இணையும் என, சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், புஷ்பா படத்தின் மெகா வெற்றி அல்லு அர்ஜுனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

விளம்பரங்களில் பிஸியான அல்லு அர்ஜுன்

விளம்பரங்களில் பிஸியான அல்லு அர்ஜுன்

புஷ்பா படத்துக்கு முன்பாக 2020ல் வெளியான ' ஆலா வைகுந்தபுரமுலோ' திரைப்படமும் அல்லு அர்ஜுனுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்திருந்தது. அடுத்தடுத்து இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ள அல்லு அர்ஜுனுக்கு விளம்பரங்களில் நடிக்க அதிக ஆஃபர்கள் வருகின்றன. ஏற்கனவே விளம்பரங்களில் பிஸியாக நடித்து வந்த அல்லு அர்ஜுன் இப்போது இன்னும் பரபரப்பாக காணப்படுகிறார். சமீபத்தில் வெளியான பாலிவுட் படங்களும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்பதால், இந்தி நடிகர்களின் விளம்பர பட வாய்ப்புகளும் அல்லு அர்ஜுனுக்கே கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு விளம்பரத்துக்கு இத்தனை கோடியா?

ஒரு விளம்பரத்துக்கு இத்தனை கோடியா?

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராகிவிட்ட அல்லு அர்ஜுனிடம், 5 விளம்பர படங்களில் நடிக்க வெவ்வேறு கம்பெனிகள் அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐந்து விளம்பரங்களுக்கும் சேர்த்து அல்லு அர்ஜுன் மொத்தம் 45 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு விளம்பரத்துக்கு 9 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்பு இந்தி நடிகர்களுக்குத்தான் இப்படி கோடிகளில் சம்பளம் கொட்டி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X