»   »  அடப் பாவிகளா, தெலுங்கு பிக் பாஸும் காப்பியா?

அடப் பாவிகளா, தெலுங்கு பிக் பாஸும் காப்பியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு பிக் பாஸும் தமிழ் நிகழ்ச்சியை போன்று காப்பி என்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி மட்டும் அல்ல காப்பியடித்தும் நடத்தப்படுகிறது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்து தமிழ் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

தமிழில் இருந்து காப்பியடித்து தெலுங்கு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

ஸ்ரீ

ஸ்ரீ

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ உடல்நிலையை காரணம் காட்டி வெளியேறினார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பர்னிங் ஸ்டார் சம்பூர்ணேஷ் பாபு உடல்நிலையை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றுவிட்டார்.

லைட்டா

லைட்டா

தமிழில் இருந்து அப்படியே காப்பியடித்தால் நன்றாக இருக்காது அல்லவா அதனால் தெலுங்கில் லைட்டா மாற்றம் செய்துள்ளனர். சம்பூர்ணேஷ் சிசிடிவி கேமராவை உடைத்துவிட்ட காட்சியை கூடுதலாக சேர்த்துள்ளனர்.

பரணி

பரணி

இந்தியில் குஷால் டாண்டன் பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றதை காப்பியடித்து தமிழில் வைத்தனர். தமிழில் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

போதைப் பொருள் விசாரணைக்காக போலீசார் முன்பு ஆஜராக நடிகை முமைத் கான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இது தான் பிக் பாஸே எதிர்பாராத டுவிஸ்ட்.

English summary
Telugu Big Boss programme has copied a scene from Tamil Big Boss. It is noted that Tamil Big Boss show has already copied a scene from its hindi version.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil