சட்ட சிக்கலில் சிக்கிய த்ரிஷ்யம் 2 ... அறிவித்தபடி ரிலீஸ் ஆகுமா ?

ஐதராபாத் : மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த த்ரிஷ்யம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம். இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மலையாளத்தை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

தொடர்ந்து த்ரிஷ்யம் 2 படமும் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, ஓடிடி.,யில் இந்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் 2 எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

த்ரிஷ்யம் 2 ரிலீஸ்

த்ரிஷ்யம் 2 ரிலீஸ்

இதில் தெலுங்கில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படத்தில் வெங்கடேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். த்ரில்லர் படமான இப்படம் நவம்பர் 25 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் கொரோனா இரண்டாம் அலை சமயத்தில் வெங்கடேஷ் நடித்த நரப்பா படம் ஓடிடி.,யில் வெளியிடப்பட்டு, ஹிட் ஆனது.

மாற்றப்பட்ட தளம்

மாற்றப்பட்ட தளம்

நரப்பா வெளியீட்டிற்கு முன்பு த்ரிஷ்யம் 2 படம் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக தயாரிப்பாளர்கள் ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் டீல் பேசி முடித்து விட்டதாக கூறப்பட்டது. தெலுங்கில் சப்ஸ்கிரைபர்கள் அதிகமுள்ள ஓடிடி தளம் என்ற அடிப்படையில் ஹாட் ஸ்டாரில் த்ரிஷ்யம் 2 மற்றும் மேஸ்ட்ரோ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஹாட்ஸ்டாரில் த்ரிஷ்யம் 2 வெளியாகும் என பேசிய பிறகு எதற்காக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகும் என தற்போது மாற்றி இருக்கிறார்கள். ஹாட்ஸ்டாருடன் என்ன பிரச்சனை என கேள்வி எழுந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்தோ, ஹாட்ஸ்டார் தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

குழப்பிய தயாரிப்பாளர்கள்

குழப்பிய தயாரிப்பாளர்கள்

இது பற்றி விசாரித்த போது கிடைத்த தகவலின்படி, த்ரிஷ்யம் 2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆன்டனி பெரும்பாவூர், இந்த படத்தை ஹாட்ஸ்டார் தளத்திற்கு விற்றுள்ளார். அதே சமயம் மற்றொரு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு, அமேசான் பிரைம் வீடியோவுடன் வேறுவிதமான ஒப்பந்தத்தை போட்டுள்ளார்.

Recommended Video

Surya Jyothika ரொம்ப பிடிக்கும் | Actress Anjali Nair Excluisve | Filmibeat Tamil
சட்ட சிக்கலில் த்ரிஷ்யம் 2

சட்ட சிக்கலில் த்ரிஷ்யம் 2

இரு தயாரிப்பாளர்களும் இரு ஓடிடி தளங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் தற்போது படம் எந்த தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. சட்ட சிக்கல் ஏற்பட்டு, அதனால் படத்தின் ரிலீசுக்கே பிரச்சனை வரலாம் என்றும் கூறப்படுகிறது. படத்தை தாங்கள் தான் ரிலீஸ் செய்ய போவதாக ஹாட் ஸ்டாரும் அறிவித்தது இந்த பிரச்சனை பெரிதாவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X