»   »  தெலுங்கு ஹீரோக்கள் நன்றி கெட்டவர்கள், ஒன்னுக்கும் உதவாதவர்கள்: இயக்குனர் தேஜா

தெலுங்கு ஹீரோக்கள் நன்றி கெட்டவர்கள், ஒன்னுக்கும் உதவாதவர்கள்: இயக்குனர் தேஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு திரை உலக ஹீரோக்கள் எல்லாம் வேஸ்ட்டானவர்கள் என இயக்குனர் தேஜா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு இயக்குனர் தேஜா இயக்கிய ஹோரோ ஹோரி படம் கடந்த வாரம் ரிலீஸானது. படம் ஊத்திக் கொண்டது. இந்நிலையில் தேஜா ஹீரோக்கள் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தெலுங்கு ஹீரோக்கள் குறித்து அவர் கூறுகையில்,

ஹீரோக்கள்

ஹீரோக்கள்

தெலுங்கு ஹீரோக்கள் சுயநலவாதிகள். வெற்றி கிடைக்கும் வரை எங்களை சுற்றி சுற்றி வருவார்கள். வெற்றி கிடைத்தவுடன் ஆளே மாறிவிடுவார்கள்.

ஸ்டார்

ஸ்டார்

அவர்கள் தங்களை ஸ்டார் ஆக்கியவர்களையே மறந்துவிடுவார்கள். ஸ்டார் ஆன பிறகு நாம் அவர்களிடம் உதவி கோட்டாலோ, போனில் பேச முயன்றாலோ நம்மை அவர்கள் கண்டுகொள்வது இல்லை.

பாலிவுட்

பாலிவுட்

ஸ்டார் ஆக்கியவர்களை மறந்துவிடும் கலாச்சாரம் பாலிவுட்டில் இல்லை. உதாரணமாக சல்மான் கான் எந்த புதிய படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் தன்னை ஹீரோவாக்கிய இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யா அழைத்தால் சென்றுவிடுவேன் என்ற கன்டிஷனை போடுகிறார்.

சல்மான்

சல்மான்

சல்மான் கான் ஹீரோவாக அறிமுகமான மேன் பியார் கியா படத்தின் இயக்குனர் தான் சூரஜ். இன்றளவும் அவருக்கு நன்றியுள்ளவராக உள்ளார் சல்மான்.

நன்றி

நன்றி

நான் அறிமுகப்படுத்திய ஹீரோக்களில் பலர் நன்றி கெட்டவர்கள். என்னைப் பொறுத்த வரை அவர்கள் வேஸ்ட்டானவர்கள் என்று தேஜா தெரிவித்துள்ளார்.

English summary
Director Teja, who again ended up making a dud called Hora Hori, which released last Friday, is back in news with yet another controversial interview. He said that Telugu heroes are waste fellows.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil