»   »  ஆந்திராவில் "விஜய் திவஸ்".. கலக்கும் 'ஜில்லா'... ஜேம்ஸ் பாண்டை விரட்டியது!

ஆந்திராவில் "விஜய் திவஸ்".. கலக்கும் 'ஜில்லா'... ஜேம்ஸ் பாண்டை விரட்டியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: விஜய்யின் ஜில்லா தெலுங்கு டப்பிங் படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. முதல் நாளில் அப்படம் ரூ. 2 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாகுபலி படத்தைத் தவிர மற்ற நேரடி தெலுங்குப் படங்களுக்கு சரியான போட்டியாக ஜில்லா அமைந்திருப்பதாகவும் தெலுங்குப் பட விமர்கர்கள் கூறுகிறார்கள்.

Telugu Jilla rocks and beats James Bond

மேலும் அல்லரி நரேஷ் நடித்து நல்ல தொடக்கத்தைக் கண்டிருந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை தற்போது ஜில்லா முந்திச் சென்று பின்னுக்குத் தள்ளி விட்டதாம்.

நேரடித் தெலுங்குப் படங்களுக்கு இணையாக தெலுங்கு ஜில்லாவுக்கு நல்ல கூட்டமும், ரசிகர்களிடையே அமோக வரவேற்பும் கிடைத்துள்ளாம். வெள்ளிக்கிழமை, சனி மற்றும் இன்று ஆகிய 3 நாட்களுமே படத்திற்கு நல்லதாக அமைந்துள்ளதாகவும், ஒரு ஸ்கிரீன் உள்ள தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதாகவும், மல்ட்டிபிளக்ஸ்களில் 70 சதவீதத்திற்கு மேல் இருக்கைகள் நிரம்புவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Telugu Jilla rocks and beats James Bond

தெலுங்கு ஜில்லா ஹிட் படம் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே தெலுங்கில் அவ்வளவாக மார்க்கெட் கிடையாது. துப்பாக்கி படத்தின் டப்பிங் மட்டுமே அங்கு நன்றாக ஓடியது. இந்த நிலையில் ஜில்லா அதை முறியடித்தோடு, நேரடித் தெலுங்குப் பட நாயகர்கள் மத்தியிலும் பீதியைக் கிளப்பியுள்ளதாம்.

ரிலீஸான முதல் நாளில் அனைத்துத் தியேட்டர்களுமே ஹவுஸ் புல் ஆகியதோடு கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்ததாம். பாகுபலியும், பஜ்ரங்கி பாய்ஜானும் தற்போது தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருவதால் ஜில்லா பெரிய அளவில் வசூல் சாதனை படைக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதாக சொல்கிறார்கள்.

அல்லரி நரேஷ் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அவர் நடித்த கடைசி 5 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் போண்டியாகியிருந்தன. இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் நல்ல தொடக்கத்தைப் பெற்றதால் நரேஷ் மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் ஜில்லா வந்து அதை ஊற்றி முடி விட்டதாக சொல்கிறார்கள்.

பாகுபலிக்கு மத்தியிலும் விஜய்யின் ஜில்லாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay's Jilla Telugu dubbed version has opened decently in Andhra and Telangana. It has become a profit flick in dubbed version and has beaten the much anticipated James Bond.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil