»   »  ஸ்ருதியை கலாய்ச்சவங்கலாம் எக்கட போனீங்க: தெலுங்கு பிரேமம் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்

ஸ்ருதியை கலாய்ச்சவங்கலாம் எக்கட போனீங்க: தெலுங்கு பிரேமம் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதி ஹாஸனை கொண்டாடுகிறார்கள்.

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா உள்ளிட்டோர் நடித்த மலையாள சூப்பர் ஹிட் படமான பிரேமத்தை சந்து மொன்டேட்டி தெலுங்கில் ரீமேக் செய்தார். நிவின் பாலி கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸனும் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியை கண்டமேனிக்கு கிண்டல் செய்தனர். இந்நிலையில் இன்று படம் வெளியான பிறகு ஸ்ருதியை கொண்டாடுகிறார்கள்.

ஸ்ருதி

தெலுங்கு பிரேமம் படத்தில் ஸ்ருதி ஹாஸன் அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் என்ற செய்தியை கேட்க காத்திருந்தேன். அவரை கலாய்த்தவர்கள் தற்போது எங்கே?

பிரேமம்

தெலுங்கு பிரேமம் படத்திற்கு நல்லபடியாக விமர்சனம் கிடைத்துள்ளது. மீம்ஸ் போட்டவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

அருமை

பாதி மராத்தி, பாதி தமிழ் பெண் சித்தாராவாக ஸ்ருதி ஹாஸன் அருமையாக நடித்துள்ளார் #Premam

ரசிகன்

@shrutihaasan பிரேமம் படம் பார்த்த பிறகு உங்கள் ரசிகனாகிவிட்டேன். நீங்கள் திரையில் அருமையோ அருமை.

தாறுமாறு

@saisanath_sunny தாறுமாறு படம். ஒரிஜினலை விட நன்றாக உள்ளது. #Premam

English summary
Telugu Premam has hit the screens today and it has got excellent review from fans and critics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil