அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில்... மிரட்டலான மேக்கிங் வீடியோ!
சென்னை : மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
பவன் கல்யாண், பிஜு மேனன் கதாபாத்திரத்திலும் ராணா ப்ரித்விராஜ் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ராக்கெட் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப்போது படக்குழு செம மாஸான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு ரீமேக்
மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான அய்யப்பனும் கோஷியும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவந்த இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது எனக் கூறப்பட்டது. அந்த வகையில் தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டு அதில் ராணா மற்றும் பவன் கல்யாண் நடித்து வருகின்றனர்.

ஆக்ரோஷமான நடிப்பை
போலீஸ் அதிகாரிக்கும் ராணுவ வீரருக்கும் ஏற்படும் ஒரு சிறிய மோதல் பின் ஈகோவாக மாறி எவ்வாறு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே இந்த படத்தின் கதைக்களம் அதை மிக கச்சிதமாக செய்து எடுத்து காட்டி இருப்பார் இயக்குனர் சச்சி. பிரித்விராஜ் மற்றும் பிஜுமேனன் இதில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் கைதட்டல்களை பெற்றிருப்பார்கள்.

சாகர் சந்திரா
இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கில் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் ராணாவும், பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நடிகர் பவன் கல்யாணும் நடித்து வருகின்றனர். சாகர் சந்திரா இந்தப் படத்தை இயக்குகிறார்.சூர்யா தேவர நாகவம்சி தயாரிக்கிறார். பவன் கல்யாணுக்கு ஜோடியாக நித்யாமேனன் மற்றும் ராணாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

மேக்கிங் வீடியோ
இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க படக்குழு இப்பொழுது அசத்தலான மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது . அதில் நடிகர் பவன் கல்யாண் பீம்லா நாயக் பெயருடன் போலீஸ் உடையில் தனக்கே உரித்தான கம்பீரத்துடன் நடந்து வருகிறார். ராணா முகம் நிறைய தாடியுடன் ஆக்ரோஷமாக உட்கார்ந்து கொண்டுள்ளார். பார்ப்பதற்கு கச்சிதமாக அந்த கதாபாத்திரங்களில் பொருந்துகின்றனர். இந்த படப்பிடிப்பு வீடியோதான் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. படம் 2022 சங்கராந்திக்கு ரிலீஸ்.


Click it and Unblock the Notifications











