புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சீரியல் நடிகை திடீரென மரணம் அடைந்தது தெலுங்கு திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Trisha pets cute cleaning time | Quarantine | Lock down

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் தேவதாஸ். இவரது மகள் ஸ்ரீலக்ஷ்மி.

பிரபல சீரியல் நடிகை ஆவார். அவரது தந்தை இயக்கிய ராஜ சேகரா சரித்திரா என்ற டிவி சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

தொடர்ந்து, சின்னாரி, ருத்து கீதம், சூப்பர் மாம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் ஸ்ரீலக்ஷ்மி. அவருக்கு ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் உள்ளனர். ஸ்ரீலக்ஷ்மிக்கு பெடி ராமா ராவ் என்ற கணவரும், பிரர்னா, ராகலீனா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

சிகிச்சை பலனின்றி

சிகிச்சை பலனின்றி

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி வந்த நடிகை ஸ்ரீலக்ஷ்மி நேற்று முன்தினம் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலக்ஷ்மி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறுதிச்சடங்கில் பங்கேற்பு

இறுதிச்சடங்கில் பங்கேற்பு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் ரசிகர்கள் யாரும் ஸ்ரீலக்ஷ்மியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டாம் என அவரது உறவினர்கள் கோரிக்கையை விடுத்தனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் சிலர் மட்டுமே அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

விதி மாற்றி விட்டது

விதி மாற்றி விட்டது

மறைந்த நடிகை ஸ்ரீலக்ஷ்மி கனகலா பிரபல நடிகர் ராஜீவ் கனகலாவின் தங்கை ஆவார். பிரபல டிவி தொகுப்பாளியான சுமா கனகலாவின் நாத்தனார் அவர். கடைசியாக ஸ்ரீலக்ஷ்மி அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடிகையாக விருப்பம் இல்லை என்றும் ஆனால் விதி தன்னை கடைசியில் நடிகையாக மாற்றிவிட்டது என்றும் கூறியிருந்தார்.

3 பேர் மரணம்..

3 பேர் மரணம்..

கடந்த 20018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீலக்ஷ்மியின் தாயார் லக்ஷ்மி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை அவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது தந்தை தேவதாஸ் மரணமடைந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரீலக்ஷ்மியும் மரணமடைந்திருக்கிறார். சினிமாவில் பிரபலமான குடும்பத்தில் இரண்டு ஆண்டுகளில் 3 பேர் பலியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடைசியாக பார்க்க முடியவில்லை

கடைசியாக பார்க்க முடியவில்லை

ருத்துகீதம் சீரியலில் ஸ்ரீலக்ஷ்மிக்கு மகளாக நடித்த நடிகை பிரனவ்யா, கடைசியாக உங்கள் முகத்தை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது. எனக்கு வார்த்தையே வரவில்லை. ஐ லவ் யூ சோ மச் மம்மி.. நான் எப்போதும் உங்கள் குழந்தையாகவே இருப்பேன்.. உங்கள் முத்தங்களையும் அன்பான அணைப்புகளையும் ரொம்பவே மிஸ் செய்வேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல் திரைத்துறையினர் பலரும் ஸ்ரீலக்ஷ்மியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X