»   »  நான்காவது முறையாக அப்பாவான தெலுங்கு சூப்பர்ஸ்டார்!

நான்காவது முறையாக அப்பாவான தெலுங்கு சூப்பர்ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பவன் கல்யாண். டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான இவருக்கும் அன்னா லெஸ்னேவாவுக்கும் அழகான ஆண்குழந்தை இன்று காலை பிறந்துள்ளது.

நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்ட பவன் கல்யாண் 2007-ல் அவரை விவாகரத்து செய்தார். 'ஜானி' படத்தில் நடித்த ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்ட்து செய்தார். இப்ப்போது அன்னாவும், பவனும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

Telugu superstar blessed with baby boy

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இத்தம்பதியின் முதல் குழந்தை இதுதான். ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட போட்டோவை பிரபல பி.ஆர்.ஓ வம்சி சேகர் உடனே வெளியிட்டார்.

சமூக வலைதளத்தில், குட்டி சூப்பர் ஸ்டார் ஜூனியர் பவன் கல்யாணை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவின் புதுவரவாகியிருக்கிறார் ஜூனியர் பவன்.

English summary
Telugu superstar Pawan Kalyan blessed with a baby boy. This is the fourth time that Pawan Kalyan became the father. This is the first child for Pawan kalyan - Anna lezhneva couple.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil