»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி:

தெனாலி படத்தின் திருட்டு சி.டி.யை குடும்பத்துடன் பாரத்து ரசித்தவர் கைதுசெய்யப்பட்டார்.

கமல்ஹாசன் நடித்த தெனாலி திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்தபடத்தின் திருட்டு சி.டி.க்களை தடுக்க வீடியோ கடைகளில் போலீசார் சோதனை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீடியோ கேசட் பரிவர்த்தனை செய்யும்கடையில் தெனாலி திரைப்படத்தின் சி.டி. இருப்பதாக தகவல் கிடைத்து, அந்த வீடியோகடைக்கு போலீசார் விரைந்தனர்.

ஆனால் வீடியோ கடைக்காரர் தலைமறைவாகி விட்ட்ார். சி.டி.யை எடுத்துச் செனறவர்விலாசம் அங்கு இருந்தது.

முகவரியை வைத்து தெனாலி சி.டி. யை எடுத்துச் சென்று குடும்பத்துடன் ரசித்துக்கொண்டிருந்த செல்வராஜ் (35) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil